மத மோதலை தூண்டும் சர்ச்சை பேச்சு : பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது 7 பிரிவுகளில் கீழ் வழக்கு..!

தமிழகம்

மத மோதலை தூண்டும் சர்ச்சை பேச்சு : பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது 7 பிரிவுகளில் கீழ் வழக்கு..!

மத மோதலை தூண்டும் சர்ச்சை பேச்சு : பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது 7 பிரிவுகளில் கீழ் வழக்கு..!

கன்னியாகுமரி மாவட்டம் பனங்கரையில் சர்ச் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பிரார்த்தனை கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதை கண்டித்து அருமனையில் அருமனை கிறிஸ்தவ இயக்கம், ஜனநாயக கிறிஸ்தவ பேரவை, முஸ்லிம் அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசியதாவது: அமைச்சர் சேகர்பாபுவுக்கு மட்டுமல்ல மனோதங்கராஜூக்கும் சேர்த்து சொல்கிறேன். எத்தனை கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தினாலும், எத்தனை கோயிலில் துணி உடுக்காமல் சாமி கும்பிட்டாலும் ஒருவர் கூட ஓட்டு போட போவதில்லை. மண்டைக்காட்டு அம்மனின் பக்தர்களும் தரப்போவதில்லை. ஹிந்துக்களும் ஓட்டு தரப்போவது இல்லை. நீங்கள் வெற்றி பெற்றீர்கள் என்றால் அது கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் போட்ட பிச்சை.

உங்களின் திறமையில் ஓட்டு வாங்கவில்லை. எங்கள் ஆயர்கள் கண் அசைப்பார்கள். பெந்தகொஸ்தே ஊழியர்கள் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்வார்கள். நாங்கள் சுரேஷ்ராஜனிடம் (திமுக மாவட்ட செயலாளர் – கன்னியாகுமரி), கிறிஸ்தவர்கள் வாழும் பகுதிகளில் சென்று ஓட்டு கேட்கட்டுமா என்று கேட்ட போது அவர் மறுத்து விட்டார். நீங்கள் கிறிஸ்வர்கள் பகுதியில் பிரசாரம் செய்தால் ஹிந்து ஓட்டுகள் கிடைக்காமல் போய் விடும் என்று கூறினார். அங்க என்ன ஆச்சு எம்.ஆர். காந்தி வெற்றி வெற்றார்.

நாடார்கள் வாழும் பகுதிகளில் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து, ‘நான் நாடார்.. என்னை ஜெயிக்க வையுங்கள்’ என்றார். நாடாருக்கு புத்தி உண்டா. இவர்களும் நம்ம ஆளு ஜெயிக்கட்டும் என்று ஓட்டு போட்டனர். 1982ல் மண்டைக்காடு கலவரத்தில் ஏழு மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர் எம்.ஆர்.காந்தி. இவர் நாகர்கோவிலில் நாடார் என்று சொல்கிறார். அருமனையில் ஹிந்து என்று சொல்கிறார். தி.மு.க.,வில் உள்ள நாடார்களும் சேர்ந்து சுரேஷ்ராஜனை தோற்கடித்தனர்.

எம்.ஆர். காந்தி செருப்பு போடமாட்டார். பூமா தேவியை செருப்பு போட்டு மிதிக்க கூடாதாம். பாரத் மாதா மீது செருப்பு போட்டு மிதிக்க கூடாதாம். நம்ம ஏன் செருப்பு போடுறோம், பாரத் மாதாவின் அசிங்கம் நமது காலில் பட்டுவிடக்கூடாது என்பதற்காக. பூமா தேவியால் நமக்கு சொறி, சிரங்கு வந்து விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு இலவமாக செருப்பு கொடுத்தது. அழகாக சொன்னார்கள் இஸ்லாமியர்கள்.. ‘எங்கள் முடியை, எங்கள் பாஷையில், எங்க மயிரை கூட நீங்க பிடுங்க முடியாது. அதான் அர்த்தம்.. பைபிள்ளயே இருக்கு.. ஒரு மயிரை கூட நீ பிடுங்க முடியாது.

இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் ஒரு நண்பர் தனது குழந்தைக்கு பெயர் போட வேண்டி வந்தார். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு போய் வந்துள்ளீர்கள். ஸ்டைலான பெயர் போடுங்கள் என்றார். ஸ்டேன் சாமி என்று பெயர் வைத்தேன். அவரது மரணத்துக்கு ஐ.நா., சபை கண்டனம் தெரிவித்துள்ளது. அவருக்கு நோபல் பரிசு கிடைக்க போகிறது. அவ்வாறு கிடைக்கும் போது மோடி, அமித்ஷாவின் முகத்தில் காறி துப்பும் நிகழ்ச்சியாக அமையும்.

மோடி, அமித்ஷா என ஏதாவது ஒரு பி.ஜே.பி., காரன் பெயர் போட்டானா. ஏன்னா அது அசிங்கமான பெயர். ஸ்டேன் சாமி சாக மாட்டார். அவர் வாழ்வார். அப்படிப்பட்ட ஒரு இறை நம்பக்கையில் வாழ்வதுதான் குமரி மாவட்ட கிறிஸ்தவ -முஸ்லிம் சமுதாயம். இந்த சமூகத்தை அழிக்கலாம் என்று நினைத்தால் அது நடக்காது. நாம் 42 சதவீதத்தில் இருந்தோம். இன்று 62 தாண்டி போய் கொண்டிருக்கிறோம். இன்னும் சிறிது நாளில் 70 சதவீதம் ஆகி விடுவோம்.

பாதிரியார்னா மணி அடிக்கிற பூஜாரின்னு நினைக்காதீங்க. நல்லா படிச்சவங்க. ஸ்டேன் சாமி படித்தவர். பேராசிரியர். ஆதிவாசி மக்களுக்காக வாழ்ந்தவர். அவரது காலில் விலங்கு மாட்டி சிறை கைதி போல மருத்துவமனையில் அடைத்து வைத்தாய். நாம் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள். மோடியின் கடைசி காலம் மிகமிக பரிதாபமாக இருக்கும். எழுதி வைத்து கொள்ளுங்கள்.நாம் நம்புகின்ற கடவுள் உயிரோடு இருக்கிறார் என்றால், அமித் ஷா, மோடியை நாயும், புழுக்களும் சாப்பிடும் நிலையை வரலாறு காண வேண்டும். வரலாறு காணும். (பலமாக கைதட்டுகின்றனர்) எங்களது சாபம் உங்களை அழிக்கும்; நிர்மூலமாக்கும். இவ்வாறு பேசினார்.

இந்த நிலையில்ற அமைதியையும், அன்பையும் போதிக்கும் நிறைய பாதிரியார்கள் மத்தியில், இவர் போல இப்படி மததுவேஷம் பேசுபவர்களால் தான், நாட்டில் மத சண்டைகள் வந்து இப்படி கஷ்டப்படுகிறது. மதவெறியை தூண்டும் வகையில் அவர் பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த சர்ச்சை பேச்சால் தி.மு.க.,வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக மற்றும் ஹிந்து முன்னணியினர் கொதித்துப்போய் உள்ளனர். மாவட்டத்தின் பல போலீஸ் ஸ்டேஷன்களிலும் ஜார்ஜ் பொன்னையா மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட பா.ஜ., தலைவர் தர்மராஜ் எஸ்.பி.யிடம் மனு அளித்துள்ளார்.

இந்நிலையில் ஜார்ஜ் பொன்னையா மீது கீழ் காணும் 7 பிரிவுகளில் அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இ.பி.கோ. 143 (சட்ட விரோத கும்பலில் உறுப்பினராக இருத்தல்), 153 எ (மத, இன, ஜாதி விரோத உணர்வுகளை துாண்டுதல்), 295 எ (இரண்டு சமூகங்களுக்கிடையே ஆதாரமற்ற தகவல்களை தெரிவித்து அதன் மூலம் மோதல் ஏற்படுத்தி கலவரம் உருவாக்குதல்), 505(2) (மதமோதல்களை உருவாக்குதல்), 506 (1) (கொலை மிரட்டல்), 269 ( உயிருக்கு ஆபத்தான தொற்று நோயை பரப்பும் கவனமற்ற செயல்) தொற்றுநோய் சட்டம் 1897-3 (உயிருக்கு ஆபத்தான தொற்று நோய் பரவல் சட்டம்) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave your comments here...