பக்ரீத் பண்டிகை : நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து
இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் பக்ரீத் திருநாளும் ஒன்று. இறைவனின் தூதரான இப்ராகீம் நபிகளார் தனது மகன் நபி இஸ்மாயிலுக்கு பதிலாக ஆட்டை பலி கொடுத்ததை நினைவு கூறும் வகையிலும், அவரின் தியாகத்தை போற்றும் வகையில் ஈகை திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த விழா ஹஜ் பெருநாள் என்றும் அழைக்கப்படுகின்றது.
Eid Mubarak!
Best wishes on Eid-ul-Adha. May this day further the spirit of collective empathy, harmony and inclusivity in the service of greater good.
— Narendra Modi (@narendramodi) July 21, 2021
இந்நிலையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் பக்ரீத் பண்டிகை தின வாழ்த்துக்களை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “ஈத் முபாரக்! ஈத்-உல்-ஆதாவுக்கு வாழ்த்துக்கள். அதிக நன்மைக்கான சேவையில் நல்லிணக்கம் மற்றும் உள்ளடக்கத்தை கொண்டு, இந்த நாள் கூட்டு பிரார்த்தனைகளின் உணர்வை மேலும் அதிகரிக்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
Leave your comments here...