சோழவந்தானில், 27 ஆண்டுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.!

தமிழகம்

சோழவந்தானில், 27 ஆண்டுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.!

சோழவந்தானில், 27 ஆண்டுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.!

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் அரசு உதவிபெறும் ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில், 1994 ஆம் ஆண்டு படித்த மாணவ மாணவிகள் சந்திப்பு விழா நடந்தது.

இவ்விழாவிற்கு, பங்குத் தந்தை பால் பிரிட்டோ தலைமை தாங்கி இறைவேண்டல் செய்தார். முன்னாள் தலைமையாசிரியர் சவரிமுத்து, தலைமையாசிரியர் மரிய அந்தோணி, முன்னாள் மாணவர் கிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.்சித்ரா வரவேற்றார். முன்னாள் ஆசிரியர்கள் அந்தோணிசாமி, சாம்ராஜ் சேகரன், பவுல், ஆசிரியர்கள் ரெஜி துரைராஜ், வின்சென்ட் பால்ராஜ், ஜெயராணி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். முன்னாள் மாணவர்கள் அய்யப்பன், பெருமாள் ,சுமதி மகேஸ்வரி, கார்த்திக் ஆகியோர் ஏற்புரை பேசினார்கள். ஆசிரியர் சகாயராஜ் தொகுத்து வழங்கினார். செல்லப்பாண்டி கலைநிகழ்ச்சி நடந்தது. முன்னாள் மாணவர்கள் ரங்கநாதன் ஆகியோர் நினைவுக் கேடயம் வழங்கினார்கள். முன்னாள் மாணவி மகேஸ்வரி நன்றி கூறினார்.

இதில், மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மாணவர்கள். இதன் ஒரு பகுதியாக பள்ளியின் தரத்தை உயர்த்துவது, பள்ளியின் ஆசிரிய ஆசிரியைகளுக்கு நினைவுக் கேடயம் வழங்குதல், பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உதவிகள் செய்தல், வாழ்வில் பின்தங்கிய தங்களின் சக மாணவனுக்கு உதவுதல், உள்ளிட்ட ஆலோசனைகள் குறித்து, விவாதிக்கப்பட்டது.

Leave your comments here...