விவசாயிகள் விருப்ப மொழியில் ‘சரியான தகவலை பெற கிசான் சாரதி டிஜிட்டல் தளம் தொடக்கம்..!

இந்தியா

விவசாயிகள் விருப்ப மொழியில் ‘சரியான தகவலை பெற கிசான் சாரதி டிஜிட்டல் தளம் தொடக்கம்..!

விவசாயிகள் விருப்ப மொழியில் ‘சரியான தகவலை பெற கிசான் சாரதி டிஜிட்டல் தளம் தொடக்கம்..!

விவசாயிகள் தங்களுக்கு விருப்பமான மொழியில் சரியான நேரத்தில் சரியான தகவலைப் பெறுவதற்காக கிசான் சாரதி எனும் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ் ஆகியோர் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் (ICAR) 93 ஆவது ஆண்டு தொடக்க நாளில் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில், மீன் வளம், கால்நடை மற்றும் பால்பொருட்கள் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு.கைலாஷ் சௌத்திரி, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் ஷோபா கரன்லாஜே (Shobha Karandlaje) ஆகியோர் கலந்துக்கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் வைஷ்ணவ், கிசான் சாரதி தொழில்நுட்பம் தொலைதூரங்களில் இருக்கும் விவசாயிகளையும் தொழில்நுட்பம் மூலம் இணைக்கும் முயற்சிக்கு, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். விவசாயிகள் இதன்மூலம் வேளாண் அறிவியல் நிலைய ஆராய்ச்சியாளர்களிடமே நேரடியாக விவசாயம் குறித்து கலந்துரையாடி தனிப்பட்ட முறையில் ஆலோசனைகளைப் பெறலாம் என அவர் குறிப்பிட்டார்.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக ஆராய்ச்சியாளர்கள், விவசாயிகள் தங்கள் பயிர்களை சேமிப்புக் கிடங்குகளுக்கும் சந்தைகளுக்கும் கொண்டு செல்ல உதவும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Leave your comments here...