மத்திய பிரதேசத்தில் குழந்தையை காப்பாற்ற முயன்று கிணற்றில் விழுந்த கிராம மக்கள் : 4 பேர் உயிரிழப்பு..!
மத்திய பிரதேசத்தில் குழந்தையை காப்பாற்ற முயன்று கிணற்றில் விழுந்த கிராம மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள கஞ்ச்பசோதா என்ற கிராமத்தில் குழந்தை ஒன்று கிணற்றில் தவறி விழுந்துள்ளது. அந்த குழந்தையைக் காப்பாற்றுவதற்காக கிராம மக்கள் கிணற்றின் அருகில் திரண்டு நின்றுள்ளனர்.
அப்போது கிணற்றின் சுற்றுச்சுவரில் அதிக பாரம் ஏற்பட்டதால், அது இடிந்து விழுந்துள்ளது. இதனால் கிணற்றை ஒட்டி நின்று கொண்டிருந்த சுமார் 30க்கும் மேற்பட்டோர் கிணற்றுக்குள் விழுந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, கிணற்றில் இருந்து காயமடைந்த நிலையில் பலர் மீட்கப்பட்டதாகவும், 4 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் கிணற்றுக்குள் சிக்கியியுள்ள 15க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
गंजबासौदा की दुर्भाग्यपूर्ण घटना में देर रात तक दो शव मिले थे, एक शव आज सुबह निकाला गया है।
मैं लगातार घटनास्थल पर मौजूद प्रशासन से संपर्क में हूँ और बचावकार्यों की निरंतर मॉनिटरिंग कर रहा हूँ।
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) July 16, 2021
இந்த சம்பவம் குறித்து மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சவுகான், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும், தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
MP: 4 bodies recovered from the spot so far in Ganjbasoda area of Vidisha.
CM SS Chouhan announces an ex-gratia of Rs 5 Lakhs each for the next of the kin of the deceased & compensation of Rs 50,000 each to the injured. The injured will also be provided free medical treatment. pic.twitter.com/PgBs2hzFJB
— ANI (@ANI) July 16, 2021
மேலும் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயும், காயம் ஏற்ப்பட்டவர்களுக்கு 50ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சவுகான் கூறியுள்ளார்
Leave your comments here...