ஆயுதமேந்தி இருசக்கர ரோந்து காவலர்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டிய டிஜிபி சைலேந்திரபாபு..!
- July 14, 2021
- jananesan
- : 519
தமிழ்நாடு காவல்துறை இயக்குனராக பதவி ஏற்றுள்ள சைலேந்திரபாபு முதல்முறையாக இன்று மதுரை மாநகருக்கு வருகை புரிந்தார்.
மதுரை மாநகர் காவல்துறை அலுவலகத்தில், தென் மண்டல காவல்துறை உயர் அதிகாரிகள் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தினார். இதில், மதுரை மாநகர காவல் ஆணையாளர் தென் மண்டல காவல் துறைத் தலைவர், மற்றும் காவல் ஆணையர் திருநெல்வேலி, மாநகர் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர்கள் உள்ளிட்ட தென் மாவட்ட கண்காணிப்பாளர் கள் காவல் துணை ஆணையர் கலந்து கொண்டனர். ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் உட்பட கடுமையான சட்டங்கள் மூலம் அவர்களை தண்டிக்க ஆலோசனை வழங்கினார்.
மேலும், ரவுடிகள் மீது உள்ள பழைய வழக்குகளை துரிதப்படுத்தி அவருக்கு அதிகபட்ச தண்டனை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்து அவர்களை சிறையில் அடைக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, மதுரை மாநகரில் ஆயுதம் ஏந்திய இருசக்கர ரோந்து காவலர்களின் சிறப்பான பணியை பாராட்டி அவர்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டு வழங்கினார். கொரோனா மற்றும் கரும்புஞ்சை போன்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை யில் உள்ள தேனி மாவட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜோதிராஜ் குடும்பத்திற்கு உதவித் தொகையாக ரூ.50000ம் அவரது மகளிடம் வழங்கினார்.
Leave your comments here...