நாட்டின் மிகப் பெரிய சூரிய மின்சக்தி பூங்கா : கட்ச் பகுதியில் என்டிபிசி அமைக்கிறது.!
நாட்டின் மிகப் பெரிய சூரிய மின்சக்தி பூங்காவை குஜராத்தின் கட்ச் பகுதியில் ராண் என்ற இடத்தில் என்டிபிசி அமைக்கவுள்ளது.
தேசிய அனல் மின் நிறுவனத்தின்(என்டிபிசி) 100 சதவீத துணை நிறுவனம், என்டிபிசி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம்(ஆர்இஎல்) இந்நிறுவனம், குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள ராண் என்ற இடத்தில் 4750 மெகாவாட் திறனுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா அமைக்க, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்திடம் நேற்று அனுமதி பெற்றது.
இது நாட்டின் மிகப் பெரிய சூரியமின்சக்தி பூங்காவாக இருக்கும். பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்யவும் என்டிபிசி ஆர்இஎல் திட்டமிட்டுள்ளது.
பசுமை எரிசக்தி துறை வளர்ச்சியின் ஒரு பகுதியாக, என்டிபிசி நிறுவனம், 2032ம் ஆண்டுக்குள் 60 ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
என்டிபிசி நிறுவனம் தற்போது, 70 மின் திட்டங்கள் மூலம் 66 ஜிகா வாட் திறன் அளவுக்கு மின் திட்டங்களை நிறுவியுள்ளது. கூடுதலாக 18 ஜிகா வாட் திறனுள்ள மின் திட்டங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
Leave your comments here...