மத்திய அமைச்சரவை விரிவாக்கம்..! புதுமுகங்களுக்கு வாய்ப்பு…யார் யாருக்கு என்ன பதவி?
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று மாற்றி அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் புதுமுகங்கள், இணையமைச்சர்களாக இருந்தவர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பெண்கள், பொறியாளர்கள் மற்றும் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர்களுக்கு இம்முறை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது
மாற்றியமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் புதுமுகமாக தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எல்.முருகன் இடம் பெற்றுள்ளார்.
அசாம் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சர்பானந்த சோனாவாலுக்கும் இந்த முறை அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. ராமாயண தொலைக்காட்சி தொடரில் ராமராக நடித்து மக்களின் அபிமானத்தை பெற்றவர்.
அசாமில் இருமுறை எம்எல்ஏ ஆனவர், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அண்மையில் பாரதிய ஜனதாவில் சேர்ந்த இளம் எம்.பி, ஜோதிராதித்ய சிந்தியாவும் இம்முறை அமைச்சராகியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் வர்த்தகம் மற்றும் தொலைத்தொடர்புத் துறை இணை அமைச்சராக பதவி வகித்தவர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான முந்தைய அமைச்சரவையில் விளையாட்டுத் துறை இணை அமைச்சராக பதவி வகித்த கிரண் ரிஜிஜூ, நிதித்துறை இணையமைச்சராக பதவி வகித்த அனுராக் சிங் தாக்கூரும் இந்தமுறை அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.மீனாட்சி லேகி. உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றியவர். நாடாளுமன்ற நிலைக்குழுவில் இடம் பெற்றிருந்தவர். இந்தமுறை அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளார்.மாற்றியமைக்கப்பட்ட அமைச்சரவையில், புதிதாக 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் இருந்து 7 பேர் அமைச்சர்களாகியுள்ளனர். அடுத்ததாக குஜராத்தில் இருந்து 5 பேரும், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் மேற்குவங்கத்தில் இருந்து தலா 4 பேரும் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
அனுபிரியா சிங் படேல், ஷோபா கரண்லாஜே, தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ், மீனாட்சி லேகி, அன்னபூர்ணா தேவி, பிரதிமா பவுமிக், பாரதி பிரவின் பவார் ஆகிய 7 பெண்களுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் எல்.முருகன், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோருக்குப் பதவி அளிக்கப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. நேற்று பதவியேற்றவர்களில், 7 பேர் பெண்கள் மற்றும் எட்டு பேர் டாக்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் யாருக்கு என்ன பதவி?
* தர்மேந்திர பிரதான்: கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
* ஹர்தீப் சிங் புரி: பெட்ரோலியம் ஊரக வளர்ச்சி வீட்டு வசதித் துறை
* பியூஷ் கோயல்: ஜவுளித் துறை மற்றும் நுகர்வோர் நலத்துறை
* ஸ்மிருதி இராணி: பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மற்றும் தூய்மை இந்தியா திட்டம்
* மன்சுக் மாண்டவியா: சுகாதாரம், உரம் மற்றும் ரசாயனத் துறை
* அஸ்வினி வைஷ்ணவ்: ரெயில்வே, தகவல் தொழில்நுட்பம், தொலைதொடர்பு மந்திரி
* ஜோதிராதித்ய சிந்தியா: விமானப் போக்குவரத்து துறை
* அனுராக் தாக்கூர்: தகவல் ஒலிபரப்புத் துறை
* வீரேந்திர குமார்: சமூக நீதி மேம்பாட்டுத் துறை
* கிரண் ரிஜிஜூ: சட்டத்துறை
* கிஷன் ரெட்டி: வடகிழக்குப் பிராந்திய வளர்ச்சி
* கிரிராஜ் சிங்: ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறை
* பசுபதி குமார் பாரஸ்: உணவு பணப்படுத்துதல் துறை
* சர்பானந்த சோனாவால்: துறைமுகம் கப்பல் ஆயுஷ் துறை
* நாராயண் ராணே: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை
* ராஜ்குமார் சிங்: மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை
* பூபேந்தர் யாதவ்: சுற்றுச்சூழல், வனம், தொழிலாளர் வேலைவாய்ப்புத் துறை
* ராமசந்திர பிரசாத் சிங்: எக்கு துறை
* பிரஹலாத் ஜோஷி: நாடாளுமன்ற விவகாரத் துறை
* முக்தார் அப்பாஸ் நக்வி: சிறுபான்மையின நலத்துறை
* கஜேந்திர சிங் ஷெகாவாத்: ஜல்சக்தி துறை
* ராஜ்குமார் சிங்: மின் சக்தி துறை
* மகேந்திர நாத் பாண்டே: கனரக தொழில் துறை
* பார்ஷோத்தம் ரூபாலா: மீன்வளத்துறை, கால்நடை
மேலும் பிரதமர் மோடி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (கூடுதல் பொறுப்பு)
அமித்ஷா கூட்டுறவுத் துறை கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...