தமிழகத்தில் இன்று முதல் அனைத்து கோவில்களும் திறப்பு – அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் பக்தர்கள் தரிசனம்.!
கொரானா 2 வது அலை காரணமாக கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருந்தது.
கொரோனா பரவல் தமிழகத்தில் மெல்ல மெல்ல குறைய துவங்கியதை அடுத்து, கட்டுப்பாடுகளுடன் தளர்வுகளை தமிழகஅரசு அறிவித்தது.அந்த வகையில் இன்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் திறந்து பொதுமக்களின் வழிபாட்டிற்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில், தெப்பக்குளம் மாரியம்மன் திருக்கோவில், முக்தீஸ்வரர் திருக்கோவில், அழகர் கோவில், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பெரும்பாலான கோவில்கள் நேற்று கோவிலில் வளாகங்கள் அனைத்தும், கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு இன்று முதல் வழிபாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு, தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்த பின்னரே, அனுமதிக்கப்படுகின்றனர். தமிழத்தில் இன்று முறையில் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..
Leave your comments here...