கொரோனா தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்ப்படுமா..? மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்

இந்தியா

கொரோனா தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்ப்படுமா..? மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்

கொரோனா தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்ப்படுமா..? மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்

கொரோனா தடுப்பூசியால் ஆணுக்கோ, பெண்ணுக்கோ மலட்டுத்தன்மை வரும் என்பதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரம் ஏதும் இல்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

குழந்தை பெறும் வயதில் உள்ளவர்களிடையே கொவிட்-19 தடுப்பூசிகள் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்று ஒரு சில ஊடக செய்திகள் வெளியிட்டிருப்பதோடு, இந்தத் தடுப்பூசிகளை பாலூட்டும் தாய்மார்கள் போட்டுக்கொள்வது பாதுகாப்பானதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

தற்போது பயன்பாட்டில் உள்ள எந்தத் தடுப்பூசிகளும் ஆண்கள் அல்லது பெண்களிடையே மலட்டுத்தன்மையை ஏற்படுத்தாது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்ற பிரிவில் தனது (https://www.mohfw.gov.in/pdf/FAQsforHCWs&FLWs) இணையதளத்தில் தெளிவுபடுத்தியுள்ளது. பக்க விளைவுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அனைத்துத் தடுப்பூசிகளும், முதலில் விலங்குகளிடமும், அதைத்தொடர்ந்து மனிதர்களிடமும் சோதனை செய்யப்படுகிறது. தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் உறுதி செய்யப்பட்ட பிறகுதான் அவற்றுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

மேலும், கொரோனா தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்ற தவறான கருத்தைத் தடுப்பதற்காக, இது போன்ற கருத்துகளுக்கு எந்த விதமான அறிவியல் ஆதாரங்களும் இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது (https://twitter.com/PIBFactCheck/status/1396805590442119175). தடுப்பூசி, பாதுகாப்பானது மற்றும் செயல்திறன் வாய்ந்தது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்புமருந்து வழங்கலுக்கான தேசிய நிபுணர்குழு, பாலூட்டும் தாய்மார்கள் அனைவருக்கும் இந்த தடுப்பூசியை பரிந்துரைத்துள்ளதோடு, இது முற்றிலும் பாதுகாப்பானது என்பதால் தடுப்பூசியை போட்டுக் கொள்வதற்கு முன்போ அல்லது அதற்குப் பிறகோ பாலூட்டுவதை நிறுத்த வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது

Leave your comments here...