பிரதமர் ஏழைகள் நல உதவி திட்டம் : மாநிலங்களுக்கு 76.72 லட்சம் மெட்ரிக் டன் இலவச உணவு தானியங்கள் விநியோகம்.!

இந்தியா

பிரதமர் ஏழைகள் நல உதவி திட்டம் : மாநிலங்களுக்கு 76.72 லட்சம் மெட்ரிக் டன் இலவச உணவு தானியங்கள் விநியோகம்.!

பிரதமர் ஏழைகள் நல உதவி திட்டம் : மாநிலங்களுக்கு 76.72 லட்சம் மெட்ரிக் டன் இலவச உணவு  தானியங்கள் விநியோகம்.!

பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ் 76.72 லட்சம் மெட்ரிக் டன் இலவச உணவு தானியங்களை அனைத்து 36 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இந்திய உணவு கழகம் 2021 மே மற்றும் ஜூன் மாதங்களில் வழங்கியது

2021 ஜூன் 21 வரை, பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ் 76.72 லட்சம் மெட்ரிக் டன் இலவச உணவு தானியங்களை அனைத்து 36 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு முகமையான இந்திய உணவு கழகம் வழங்கியுள்ளது,

ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், சண்டிகர், சத்திஸ்கர், தில்லி, கோவா, குஜராத், ஹிமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, லட்சத்தீவுகள், மணிப்பூர், மேகாலயா, மிசோராம், நாகாலாந்து, புதுச்சேரி, பஞ்சாப், தமிழ்நாடு, தெலங்கானா, திரிபுரா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 22 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் 2021 மே-ஜூனுக்கான மொத்த ஒதுக்கீட்டையும் பெற்று விட்டன.

அந்தமான் & நிகோபார் தீவுகள், அசாம், பிகார், தாமன் டையு தாத்ரா & நாகர் ஹவேலி, ஹரியானா, ஜம்மு காஷ்மீர், லடாக், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், சிக்கிம், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட 14 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் 2021 மே மாதத்திற்கான மொத்த ஒதுக்கீட்டையும் பெற்று விட்ட நிலையில், 2021 ஜூனுக்கான ஒதுக்கீட்டை பெற்றுக்கொண்டிருக்கின்றன.

அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிலும் போதிய இருப்பை இந்திய உணவு கழகம் வைத்துள்ளது. 593 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் 294 லட்சம் மெட்ரிக் டன் அரிசி (மொத்தம் 887 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள்) தற்போது மத்திய தொகுப்பில் உள்ளன.

அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கும் சுமூகமான விநியோகத்தை உறுதி செய்வதற்காக உணவு தானியங்களை நாடு முழுவதற்கும் இந்திய உணவு கழகம் எடுத்து சென்றுக் கொண்டிருக்கிறது. ஒரு நாளைக்கு சுமார் 45 ரேக்குகள் எனும் அளவில், 2353 உணவு தானிய ரேக்குகள் 2021 மே 1 முதல் இந்திய உணவு கழகத்தால் அனுப்பப்பட்டுள்ளன.

பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்களை குறித்த நேரத்தில் விநியோகிக்குமாறு அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பயனாளிகளின் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கொவிட் பெருந்தொற்றின் போது இலவச உணவு தானியங்களை பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டம் வழங்கி வருகிறது.

கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பில் இருந்து ஏழைகளை பாதுகாக்கும் வகையில் பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தை இந்திய அரசு அறிவித்தது. தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் பயனாளிகளுக்கு இதன் மூலம் ஒரு நபருக்கு மாதம் 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

Leave your comments here...