சர்வதேச யோகா தினம் : யோகா சகோதரர்கள் 21 நிமிடங்களில், 21 யோகாசனங்கள் செய்து சாதனை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் அசாருதீன் (வயது 20), சல்மான் கான் (வயது 18). இவர்கள் சிறுவயதிலிருந்தே பல்வேறு யோகாசனங்கள் மூலம் சாதனை புரிந்துள்ளனர். ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி உலக யோகா தினம் வருவதை முன்னிட்டு, இந்த ஆண்டு யோகா சகோதரர்கள் இருவரும் 21 நிமிடங்களில் 21 யோகா ஆசனங்கள் செய்தனர்.
ஆணி பலகையில் யோகாசனம் மற்றும் ஹெல்மெட், கண்ணாடி டம்ளர், நாற்காலி ஆகியவற்றில் உடலை வருத்தி புதுமையான முறையில் 21 ஆசனங்கள் செய்து சாதனை புரிந்தனர். யோகா கலை மூலம் உடல் வலிமையும், நீண்ட ஆரோக்கியத்தையும், மனவலிமையும் பெற முடியும் முடியும், உடல், மனதிற்கும் பயிற்சியாக இருக்கும் என்று கூறினார்.
மேலும் , இயற்கை உணவே உடலுக்கு ஆரோக்கியமானது. ஆகையால் காய்கறிகள், பழங்கள் மற்றும் இயற்கை உணவுகளான பருப்புகள், கம்பு, கேழ்வரகு ஆகியவற்றை உண்ண வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக பழங்கள், காய்கள், தானியங்கள் போன்றவற்றை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
செய்தி: Ravi Chandran
Leave your comments here...