குமரியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கிறிஸ்தவ குருசடி – பாஜக, இந்து இயக்க இயக்கங்களின் போராட்டத்தால் குருசடி கட்ட அனுமதி இல்லை.!
- June 19, 2021
- jananesan
- : 1310
கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் கிராமத்தில் உள்ளது தொட்டிப் பாலம். இந்த பாலம் திருவட்டாறு அருகே இருக்கிறது. தெற்கு ஆசியாவிலேயே மிக உயரமான பாலமாகவும் கருதப்படுகிறது. இந்த பாலம் பாரலீ நதியின் மீது கட்டப்பட்டு இருக்கின்றது. திருவட்டாறு அருகே இருக்கும் தொட்டிப் பாலம் சுற்றுலாத் தலங்களை கவரும் வண்ணமாக இருக்கின்றன.
இந்நிலையில் சுற்றுலாதலமான மாத்தூர் தொட்டிபாலம் அருகே அனுமதியின்றி அமைக்கபட்ட கிறிஸ்தவ குருசடி அகற்றகோரி காலை முதல் பாஜக இந்து இயக்கத்தை சேர்ந்தவர்கள் 50 மேற்பட்ட சாலை மறியல் போராட்டங்கள் நடைப்பெற்றது. தொடர்ச்சியான போராட்டங்களால் போக்குவரத்து பாதிப்பு.
இது தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து ஆர்எஸ்எஸ், இந்துமுண்னணி, பாஜக தலைவர்கள் தொண்டர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டார்கள்.
பின்னர் சப் கலெக்டருடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு புதியதாக சர்ச் கட்ட அனுமதி இல்லை.இடைக்கால ஏற்பாடாக அந்த கட்டிடம் தார்பாலினால் மூடப்படும். அதன் பிறகு எதற்காக அனுமதி வாங்கி உள்ளனரோ அதற்கு மட்டுமே அனுமதிக்கப்படும் சர்ச் கட்ட அல்ல என சப் கலெக்டருடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு அரசு தரப்பு அறிவிப்பு.இந்த கூட்டத்தில் ஹிந்துக்கள் சார்பாக ஆர்எஸ்எஸ் ராஜேந்திரன் , எம்.ஆர்.காந்தி,பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ்,ஹிந்து முன்னணி மிசா சோமன், கலந்து கொண்டனர்
Leave your comments here...