8 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் பேருந்து சேவை அனுமதிக்க மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை!!

தமிழகம்

8 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் பேருந்து சேவை அனுமதிக்க மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை!!

8 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் பேருந்து சேவை அனுமதிக்க மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை!!

சென்னை தலைமை செயலகத்தில் ஊரடங்கை நீட்டிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனையில் மருத்துவ குழு, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதுகுறித்த அறிவிப்பை இன்று மாலை வெளியிடுவார் என்று தெரிகிறது.கட்டுப்பாடுகளுடன் நகைக்கடை, துணிக்கடை மற்றும் பேருந்து சேவையை உள்ளிட்டவற்றுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா குறையாத 8 மாவட்டங்களை தவிர்த்து 30 பிற மாவட்டங்களில் பேருந்து சேவை அனுமதிக்கப் பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா குறைவாக உள்ள மாவட்டங்களில் 50 சதவீதம் பயணிகளுடன் பேருந்து சேவையை தொடங்க மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது. கொரோனா பரவல் விகிதம் அதிகம் உள்ள கோவை ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடர மருத்துவ குழு பரிந்துரைத்துள்ளது.அதே நேரம் கொரோனா தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் பெரிய கடைகள், மால்களை திறக்க மருத்துவ குழு பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...