கட்டு கட்டாக லஞ்சபணம் : பேரூராட்சி செயல் அலுவலர்களை குறி வைத்த விஜிலென்ஸ்-லபக் லபக் லபக்
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி மன்றங்கள் இல்லாத போனதால் ஊழல் அதிகாரிகள் காட்டில் கல்லாமழைதான் இந்த ஊழல் வாதிகளால் நாட்டுக்கும் ஆட்சிக்கும் எந்த பயனும் இல்லை. தமிழகத்தில் உள்ள பல்வேறு பேரூராட்களில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க கூட நிதி இல்லை, காரணம் வோட்சர் பில், தெருவிழக்கு பராமரிப்பு, குடிநீர் பிளம்பர் பராமரிப்பு, டெங்கு விழிப்புணர்வு, அப்படி இப்படி என்று பொய்யான பில்லை போட்டு, தப்பித்துக்கொள்ள மேல் அதிகாரிகளின் நாவில் தேனை தடவி செமத்தியா சுருட்டுகிறார்கள், கலெக்டர்களும் இந்த பணிகள் எல்லாம் நடந்தனவா என ஆய்வு செய்வதும் கிடையாது.
இதனால் தணிக்கை அதிகாரிகளின் காட்டிலும் கல்லா மழைதான் இவர்கள் எவரையும் மதிக்க வேண்டிய அவசியமும் கிடையாது உதாரணத்திற்கு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நெல்லை, கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பேரூராட்சிகளின் ஏடிக்கள் வீடுகளை ரெய்டு செய்தாலே பல கோடிகளை கை பற்றலாம், இவர்கள் மத்திய அரசு மூலம் வரும் வீட்டுத்திட்ட பணிகளை ஒரு பொருட்டாகவே நினைப்பது கிடையாது, காரணம் லஞ்சம் அதிகமாக வாங்க முடியாது, மாதம் தோறும் ஏ,எஸ் அனுதிக்கு மட்டுமே 15% கமிஷன் வாங்குகிறார்கள்.ஒரு பேரூராட்சி செயல் அலுவலர் சரியாக மாமுல் கொடுத்தால் அவர்களுக்கு இன்னொரு பேரூராட்சி இன்சார்ச்சாக கொடுக்கிறார்கள், மக்கள் நலனில் அக்கறையும் காட்டுவது கிடையாது அப்பாவி மக்கள் வீடு கட்ட பிளான் கேட்க வந்தால் அவர்களை இழுத்தடித்து பின்னர் பேரம் பேசி அமொண்டை நவுட்டி விடுகிறார்கள்.
இப்படி தான் கடலூர் மாவட்டம் வடலூர் பஸ்நிலையம் அருகே பேரூராட்சி அலுவலகம் உள்ளது. இங்கு செயல் அலுவலராக சக்கரவர்த்தி பணியாற்றி வருகிறார். இவரது சொந்த ஊர் வடலூர் ஆகும். இவர் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி அலுவலகத்தையும் கூடுதலாக கவனித்து வருகிறார். வடலூரைச் சேர்ந்தவர் மோகன்தாஸ். இவர் தனது வீட்டு மனைக்கு அங்கீகாரம் வழங்கக் கோரி வடலூர் பேரூராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
இந்த நிலையில், `உங்கள் வீட்டுமனைக்கு அங்கீகாரம் தருகிறேன். 25,000 ரூபாய் கொடுங்கள்’ என்று பேரூராட்சி செயல் அலுவலர் சக்கரவர்த்தி கூறியுள்ளார். என்னடா இந்த செயல் அலுவலர் சம்பளமே வாங்காமல் தர்மத்திற்கு வேலை செய்வது போல் மனசாட்சியே இல்லாமல் இப்படி பணம் கேட்கிறானே என்று வருத்தப்பட்டு மோகன்தாஸ் இது குறித்து கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து,அவர்கள் கூறியபடி லஞ்ச ஒழிப்புத் துறையினர் கொடுத்த ரசாயனம் தடவிய 25,000 ரூபாய் நோட்டுகளை இன்று பேரூராட்சி செயல் அலுவலர் சக்கரவர்த்தியிடம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரைக் கையும் களவுமாக கைது செய்தனர்.
அப்புறம் என்ன மிச்ச கதையை சொல்லணுமா என்ன… ஆப்பு சூப்புத்தான் செயல் அலுவலரான சக்கரவர்த்தி கைது ஆன சம்பவத்தை கேள்வி பட்ட மற்ற செயல் அலுவலர்கள் செல்போனை ஆப் செய்து விட்டு எஸ்கேப் ஆகிட்டாங்களாம்.
இதே போல் தான் மேற் சொன்ன மாவட்டங்களில் உள்ள பேரூராட்சிகளில் ஏடிக்களுக்கு யார்…? யார்..? அதிகம் வசூல் செய்து கொடுத்து பெயர் எடுப்பது என்பதில் போட்டா போட்டியே நிலவுதுண்ணா பாருங்களேன். போடாத ரோட்டை போட்டது போல் பில் போடுவது, பொறியாளர்கள் அது போல் எதுவுமே பர்ச்சஸ் செய்யாமலேயே பர்ச்சஸ் செய்வது போல் டுபாக்கூர் பில் போட்டு சாப்பிடுவதில் 75% செயல் அலுவலர்கள் பலே கில்லாடிகள். இவர்கள் போட்டுள்ள பில்லுகளை மட்டும் ஆய்வு செய்தலே அவங்க வேலை செஞ்சாங்களா என்பது தெரிய வரும். மேலும் ஏடிக்களுக்கு முறைவாசல் செய்வதிலேயை இஒ-க்களிடையே கோஷ்டி பூசல் நடக்குதுண்ணா பாருங்களேன் ஏன்…? ஏண்ணா அம்புட்டும் காசு துட்டு மணி தான் ஓய்..
இவங்க இனி லஞ்சம் கேட்டு..? இந்த நம்பருக்கு வாட்சாப் அனுப்புங்களேன் 9498180936 இது தான் விஜிலென்ஸ் நம்பர் சார்…!!!!!
Leave your comments here...