முதலாமாண்டு நினைவஞ்சலி – கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடன் நடந்த மோதலில் உயிரிழந்த கர்னல் சந்தோஷ் பாபுவுக்கு சிலை திறப்பு.!
கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடன் நடந்த மோதலில், வீரமரணமடைந்த கர்னல் சந்தோஷ் பாபுவுக்கு சிலை வைத்து, தெலங்கான அரசு மரியாதை செய்துள்ளது.
இந்தியா-சீனா ராணுவ வீரர்களுக்கிடையே லடாக் பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம், பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் தெலங்கானாவைச் சேர்ந்த கர்னல் சந்தோஷ் பாபு உட்பட 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, சந்தோஷ் பாபுவின் குடும்பத்தினருக்கு தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் ரூ. 5 கோடி நிதியுதவி வழங்கியதுடன், ஹைதராபாத்தில் ரூ. 20 கோடி மதிப்புள்ள நிலம் மற்றும் சந்தோஷ் பாபுவின் மனைவிக்கு உதவி ஆட்சியர் பணிக்கான நியமன பத்திரத்தையும் வழங்கினார். தற்போது சந்தோஷ் பாபுவின் மனைவியான சந்தோஷி ஹைதராபாத்தில் உதவி ஆட்சியராக பணியாற்றி வருகிறார்.
భారత్ - చైనా సరిహద్దులో విధులు నిర్వర్తిస్తూ అమరుడైన వీర జవాన్ కల్నల్ సంతోష్ బాబు విగ్రహాన్నిసూర్యాపేట కోర్టు చౌరస్తాలో ఆవిష్కరించిన మంత్రులు శ్రీ @KTRTRS, శ్రీ @jagadishTRS. ఈ కార్యక్రమంలో పాల్గొన్న కల్నల్ సంతోష్ బాబు కుటుంబసభ్యులు #colonelsantoshbabu pic.twitter.com/CWwHDFUyOg
— Jagadish Reddy G (@jagadishTRS) June 15, 2021
இந்நிலையில், சந்தோஷ்பாபுவின் உயிர்த் தியாகத்தை நினைவுகூரும் விதமாக கர்னல் சந்தோஷ் பாபுவின் சிலை, ஐதராபாத் அருகே சூர்யாபேட்டையில் நிறுவப்பட்டுள்ளது. கைகளில் தேசியக் கொடி ஏந்தி நிற்கும் சந்தோஷ் பாபுவின் சிலையை, தெலங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ் திறந்து வைத்தார்.
Leave your comments here...