மதுரையில், மாநகராட்சி, ஆட்டோமொபைல் அசோசியேஷனுடன் இணைந்து இலவச தடுப்பூசி முகாம்.!
மதுரை கே.கே. நகரில், மாநகராட்சி மற்றும் ஆட்டோமொபைல் அசோசியேஷன் ஆகியவை இணைந்து, ஆட்டோமொபைல் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை, இன்று செவ்வாய்க்கிழமை நடத்தியது.
இந்த முகாமுக்கு, மதுரை மாவட்ட ஆட்சியர் மரு. அனிஷ்சேகர் தலைமை வகித்தார். மதுரை மாநகராட்சி ஆணையாளர் மரு. ப. கார்த்திகேயன், முன்னிலை வகித்தார்.
தமிழக வணிகவரித்துறை அமைச்சர் பி. மூர்த்தி, முகாமை தொடங்கி வைத்தார்.அப்போது, அமைச்சர் பி. மூர்த்தி கூறியது: மதுரையில், அரசு எடுத்துவரும் நடவடிக்கையால் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது.அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும், பொதுமக்கள் முழூ ஒத்துழைப்பு இருந்தால் தான், நோயை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.பொதுமக்கள், மருத்துவத் துறையினர் தெரிவிக்கும் நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றார்.
மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் கூறும்போது:மதுரை நகரில் 31 நகர்புற மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மூலமாகவும், தொடர்ந்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது, இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். மதுரை ஆட்டோமொபைல் தொழிலாளர்கள் சுமார் 1200 பேருக்கு, தடுப்பூசி போடப்பட்டது.
மேலும், இந்த தடுப்பூசி முகாமில், மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, ஆட்டோ மொபைல் அசோசியேஷன் தலைவர் திணேஷ், செயலர் கார்த்திக் அருண் குணா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மகேஸ்வரன், நவீன்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி : RaviChandraN
Leave your comments here...