சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா பொதுமக்கள் பக்தர்கள் இன்றி கொடியேற்றம்

ஆன்மிகம்

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா பொதுமக்கள் பக்தர்கள் இன்றி கொடியேற்றம்

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா பொதுமக்கள் பக்தர்கள் இன்றி கொடியேற்றம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவக்கம் பொதுமக்கள் பக்தர்கள் அனுமதி இன்றி கோவில் வெறிச்சோடி கிடந்தது.

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும் இங்கு வைகாசி மாதம் திருவிழா கொடியேற்றத்துடன் 17 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இத்திருவிழாவை முன்னிட்டு இன்று ஜூன் 14 இரவு 7 45 மணிக்கு கோவில் வளாகத்திற்குள் உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றும் விழா பக்தர்கள் சூழ பக்தி கோஷம் முழங்க விழா சிறப்பாக நடைபெறும். ஆனால் கொரானோ நோய்த்தொற்றின் காரணமாக தமிழக அரசின் உத்தரவின் பேரில் அறநிலையத்துறையின் அரசாணையின் படி இத்திருவிழா பொதுமக்கள் பக்தர்கள் அனுமதி இல்லாமல் நடப்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் கோவில் வளாகத்திற்குள்ளேயே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் எழுந்தருளும் காட்சி நடப்பதால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை அங்கு நேர்த்திக்கடன் செய்பவர்களும் அனுமதியின்றி வெளியிலேயே அம்மனுக்கு முடிகாணிக்கை செலுத்தி நெய்விளக்கு ஏற்றி விட்டு சென்றனர் இதுகுறித்து கோவில் நிர்வாகம் தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி அறநிலையத்துறை உத்தரவின்படி பொது மக்களுக்கும் பக்தர்களுக்கும் அறிவிப்பு பலகைகள் வைத்துள்ளனர் கோவிலுக்குள்ளேயே நடைபெறும் 17 நாள் திருவிழா இதில் முக்கிய திருவிழாவாக அக்கினிச்சட்டி பால்குடம் பூப்பல்லாக்கு பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சியும் தேர்த்திருவிழா தீர்த்தவாரி திருவிழாக்கள் அனைத்தும் ஊர் மத்தியில் நடைபெற உள்ள விழாக்கள் ஆகும் இவை அனைத்தும் அனுமதிக்கப்படவில்லை நடக்காது என்பதையும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதற்கு பொதுமக்களும் பக்தர்களும் ஒத்துழைப்பு தருமாறு கோவில் நிர்வாகம் கேட்டுள்ளது இந்தப் பதினேழு நாட்கள் திருவிழாவில் உபயதாரர்கள் கட்டளைதாரர்கள் எவருக்கும் கோவிலில் அனுமதி இல்லை கோவில் பணியாளர்கள் மட்டும் இத்திருவிழாவில் பங்கு கொள்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இதனால் இன்று நடந்த கொடியேற்று விழாவில் பக்தர்கள் இன்றி கோவில் அர்ச்சகர்கள் நிர்வாகிகள் பணியாளர்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.

முன்னதாக பங்குனி மாதம் கோவில் முன்பு உள்ள பலிபீடத்தில் மூன்றுமாத கம்பம் கொடியேற்று விழா பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. திருவிழா காலத்தில் கோவிலில் நேர்த்திக்கடன் செய்பவர்களுக்கு அனுமதி இல்லை என்பதை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

செய்தி : RaviChandraN

Leave your comments here...