மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் தீ விபத்து – புனரமைப்பு பணிகளுக்காக முதல் கட்டமாக ரூபாய் 85 லட்சம் நிதி ஒதுக்கீடு .!

ஆன்மிகம்தமிழகம்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் தீ விபத்து – புனரமைப்பு பணிகளுக்காக முதல் கட்டமாக ரூபாய் 85 லட்சம் நிதி ஒதுக்கீடு .!

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில்  தீ விபத்து – புனரமைப்பு பணிகளுக்காக முதல் கட்டமாக ரூபாய் 85 லட்சம் நிதி ஒதுக்கீடு .!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில், கடந்த 2-ம் தேதி காலை 7 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் கோவில் கருவறை மீதுள்ள பழமையான ஓட்டுக்கூரை முழுவதும் தீப் பிடித்து சேதமடைந்தது. இதுகுறித்து மண்டைக்காடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்ட மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் இன்று இரண்டாவது முறையாக ஆய்வு மேற்கொண்டனர்.ஆய்வின்போது வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரம மடாதிபதி சுவாமி சைதன்யானந்தஜி, சட்டமன்ற உறுப்பினர்கள் எம்ஆர்.காந்தி. பிரின்ஸ், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்எல்ஏ ஆஸ்டின் உட்பட பலர் கலந்து கொண்டனர்


முன்னதாக கோவிலில் தேவ பிரசன்னம் நடைபெற்று வரும் நிலையில் அதில் கலந்து கொண்ட அமைச்சர்கள் கோவிலில் தரிசனம் மேற்கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு:- மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் 85 லட்சம் ரூபாய் செலவில் பகவதி அம்மன் கோயில் புனரமைக்கப்பட உள்ளதாக கூறினார். ஊழியர்கள் அஜாக்ரதையால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்ததாக கூறிய அமைச்சர் சேகர்பாபு, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். மாதத்தில் ஒருமுறையாவது கோயில் புனரமைப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்வேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார். பல மாவட்டங்களில் அறநிலையத்துறை இணை ஆணையர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
.

Leave your comments here...