காஷ்மீரில் கட்டப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பூமி பூஜை.!
காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஜம்முவில் மஜீன் கிராமத்தில் ஏழுமலையான் கோவில் கட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. இதற்காக 62 ஏக்கர் நிலத்தை காஷ்மீர் அரசு 40 ஆண்டு குத்தகைக்கு வழங்கி உள்ளது.
அந்த நிலத்தில் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்கா கலந்து கொண்டார். அடிக்கல் நாட்டியதை குறிக்கும் கல்வெட்டை அவர் திறந்து வைத்தார்.
Laid the foundation stone for the lord Venkateswara temple in Jammu in the presence of Honourable Union ministers Shri. @kishanreddybjp, Shri. @DrJitendraSingh, Honourable Lieutenant Governor of Jammu & Kashmir shri. @manojsinha_ and other dignitaries.(1/2) pic.twitter.com/iUR8iB2Zow
— Y V Subba Reddy (@yvsubbareddymp) June 13, 2021
மத்திய மந்திரிகள் ஜிதேந்திர சிங், கிஷன் ரெட்டி, திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். ரூ.33 கோடியே 22 லட்சம் செலவில் ஏழுமலையான் கோவில் கட்டப்படுகிறது. 18 மாதங்களில் கட்டுமான பணி நிறைவடைகிறது. வேதபாடசாலை, விடுதி, திருமண மண்டபம், பக்தர்கள் தங்குமிடம், ஊழியர் குடியிருப்பு, வாகன நிறுத்துமிடம் ஆகியவையும் அந்த வளாகத்தில் அமைய உள்ளன.
Leave your comments here...