உலக பல்கலைக்கழக தரவரிசை : முக்கிய இடம் பிடித்த புதுவை பல்கலைக்கழகம்.!
QS உலக பல்கலைக்கழக தரவரிசையானது, பல்கலைக்கழகத்தின் பல முக்கிய பணிகள் – கல்வியாண்டு தேர்ச்சி விகிதம்/நற்பெயர், பல்கலைக்கழகத்தின் தலைமையின் அணுகுமுறை/அர்ப்பணிப்பு, ஆசிரிய மாணவர் விகிதம், ஆராய்ச்சி கட்டுரைகள், சர்வதேச ஆசிரியர்கள் விகிதம் மற்றும் சர்வதேச மாணவர்கள் விகிதம் போன்ற ஆறு கடுமையான செயல்திறன் குறிகாட்டிகளுடன் தரவரிசை பட்டியல் 2022 சமீபத்தில் வெளியிட்டது
இதில் புதுவை பல்கலைக்கழகம் 801 முதல் 1000 வகைகளுக்கு (category) இடையில் தரவரிசை பெற்ற உலகின் முதல் 1000 பல்கலைக்கழகங்களில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவிலிருந்து தரவரிசைப் பட்டியலில் உள்ள இந்திய பல்கலைக்கழகங்கள் / நிறுவனங்களில் முதல் 20 இடங்களில் புதுவை பல்கலைக்கழகம் இடம்பெற்றுள்ளது. QS உலக பல்கலைக்கழக இடையிலான தரவரிசையில் புதுவைபல்கலைக்கழகம் இடம் பெற்று வரலாற்று சாதனை பெற்றுள்ளது, மேலும் புதுவை பல்கலைக்கழகம் பங்கேற்கும் இந்திய மற்றும் ஆசிய பல்கலைக்கழக தரவரிசையில் தொடர்ந்து இடம்பெற்று முன்னேறிக்கொண்டேவுள்ளது.
QS உலக பல்கலைக்கழக தரவரிசையில் 2022 இல் 22 பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்கள் மட்டுமே இந்திய அளவில் இடம்பெற முடிந்தது . இதில் புதுவை பல்கலைக்கழகம் ஆராய்ச்சி, கற்பித்தல், அர்ப்பணிப்பு, ஆசிரியர்களின் ஆராய்ச்சி கட்டுரை போன்ற செயல்திறன் குறிகாட்டிகளில் மிகச் சிறந்த மதிப்பெண் பெற்று சாதனை பெற்றுள்ளது.
QS உலக பல்கலைக்கழக தரவரிசையானது 2014 முதல் அதன் தரவரிசையை அறிமுகப்படுத்தி வெளியிட்டு வருகிறது இதில் புதுவை பல்கலைக்கழகம் 2018 முதல் பங்கேற்று வருகிறது. முன்னதாக புதுவை பல்கலைக்கழகம் QS ஆசியா தரவரிசையில் 301-350 வகைபிரிவிலும் மற்றும் பிரிக்ஸ் பல்கலைக்க தரவரிசையில் 211-220 வகைபிரிவிலும் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றிகரமாக தரவரிசையில் இடம்பிடித்தது வருகிறது.
மேலும் புதுவை பல்கலைக்கழகம் மற்ற மதிப்புமிக்க உலக தரவரிசைகளான Times Higher Education (THE) உலக பல்கலைக்கழக தரவரிசை, Association of Common Wealth(ACU) பல்கலைக்கழக தரவரிசை, தேசிய தரவரிசைகளான National Institutional Ranking Framework (NIRF) தரவரிசை, Atal Ranking of Institutions on Innovation Achievements (ARIIA) தரவரிசை, Outlook-ICARE இந்தியா பல்கலைக்கழக தரவரிசை மற்றும் பிற தொழில்துறை நிதியுதவி தரவரிசை போன்ற பல்வேறு தரவரிசைகளிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறது. உலகளவில் புதுவை பல்கலைக்கழகத்தின் தரத்தினை உயர்த்தும் நோக்கத்தில் தொடர்ந்து பல்வேறு தரவரிசையில் பங்கேற்று வருகிறது
இத்தகைய சாதனையை படைக்க உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு புதுவைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங் அவர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டார். மேலும், ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு சிறந்த கல்வி ஆர்வத்தை வழங்கும் ஆசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் அர்ப்பணிப்பு பங்களிப்புடன் வரும் ஆண்டுகளில் பல்கலைக்கழகம் அதிக உயரங்களை எட்ட முனைப்புடன் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Leave your comments here...