கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு – ஏஞ்சல் டிவி பாதிரியாரை கண்டித்து ஹிந்து ஆலயபாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.!
ஜீசஸ் மினிஸ்ட்ரீஸ் என்ற பெயரில் சுவிசேஷ அமைப்பு ஒன்றை நடத்தி வரும் சாது செல்வராஜ் என்பவர் ஏஞ்சல் டிவி மூலம் தடுப்பூசிகளை போடதீர்கள் பிரச்சாரம் செய்ததை கண்டித்து ஹிந்து ஆலயபாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் மிக பெரும் போர்கால நடவடிக்கையாக கொரோனா பெருந்தொற்றை உலகமே போற்றும் வகையில் சிறப்பாக செயல்பட்டு பலலட்சம் மக்களை பாதுகாக்கும் வகையில் கொரோனா தடுப்பு ஊசிகள் மிகவிரைவாக தயாரிக்கபட்டு மக்களுக்கு உயிர் சேதாரங்களை தடுக்கும் வண்ணம் செயல்பட்டூவரும் நிலையில் கிருஸ்தவ ஏஞ்சல் தனியார் தொலைகாட்சி விஷமபிரச்சாரம் மூலமாக தடுப்பு ஊசிகள் சாத்தனின் முத்திரை பதிக்கின்றனர்.
ஜீசஸ் மினிஸ்ட்ரீஸ் என்ற பெயரில் சுவிசேஷ அமைப்பு ஒன்றை நடத்தி வரும் சாது செல்வராஜ் என்பவர் ஏஞ்சல் டிவி என்ற தொலைக்காட்சி சேனலில் தனது சுவிசேஷ நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவார். அவ்வாறு ஒளிபரப்பப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் தான் அவர் தடுப்பூசிக்கு எதிராக, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியது தெரிய வந்துள்ளது.ஏஞ்சல் டிவி நிகழ்ச்சி ஒன்றில் அதன் உரிமையாளர் சாது சுந்தர் செல்வராஜ் கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க கண்டுபிடிக்கப்படும் தடுப்பூசியில் சிப் வைக்கப்படுவதாகவும் அது சாத்தான் என்றும் கூறுவதாக வருகிறது. மேலும் தடுப்பூசி போடாமல் தப்பி ஓடுமாறு கூறுவதாகவும் வருகிறது
Cult group Angel Tv's propaganda against Vaccine has started, preacher says that vaccine has an inbuilt chip which is the mark of the beast 1/2 pic.twitter.com/dOyfifQuFJ
— Vishwatma 🇮🇳 (@HLKodo) November 15, 2020
இந்த ஊசிகளை யாரும் போடாதீர்கள் என நாடகமாக ஏஞ்சல் தொலைகாட்சியிலும் யூடியூப் சானலிலும் பதிவேற்றம் செய்துள்ளனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்திடவேண்டும் என ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் உள்ள கிருஷ்ணன் கோவில் அருகில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை ப.பரமசிவம் மாவட்ட பொதுசெயலாளர் முன்னிலை அய்யன்பெருமான் மாவட்ட செயலாளர் நன்யுரை பிரமநாயகம் நகரபொதுசெயலாளர் விழா ஏற்பாடு ராஜபாண்டி நகர தலைவர் மற்றும் ஒன்றிய செயலாளர் சண்முகம்ரெட்டியார் , மேற்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம் மற்றும் ஒன்றிய துணைதலைவர்கள் பாஜக மாவட்ட பொதுசெயலாளர் பாலஜி, பாஜக மாவட்ட செயலாளர் மாரியப்பன், பாஜக மாவட்ட பொறுப்பாளர் பாலு, பாஜக நகர தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் இந்து முன்ணனி சுதாகரன், ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி: தூத்துக்குடி ப.பரமசிவம்
Leave your comments here...