அயோத்தி தீர்ப்பு – நாட்டின் மதநல்லிணக்கத்தையும் அமைதியையும் காக்கும்படி மத்திய அமைச்சர்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்.!
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை, உச்ச நீதிமன்றத்தின், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பை வெளியிட உள்ளது.. இந்த அமர்வில் இடம்பெற்றுள்ள, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நவ. 17ல் ஓய்வு பெறுகிறார். அதனால், அதற்கு முன் தீர்ப்பு வரும், நவ.13ல் வெளியிடப்படலாம்.
இதனிடையே மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது அதில்: அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பு வெளியாக உள்ளதை அடுத்து, நாட்டின் பாதுகாப்புச் சூழல் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன.அயோத்தி பிரச்சினையில் மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் அமைச்சர்கள் பேசக்கூடாது என்றும், நாட்டில் அமைதியைப் பாதுகாக்க வேண்டும் எனவும் மோடி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து பணிந்து ஏற்கும்படியும் மோடி அமைச்சர்களிடம் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இதனிடையே அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாவதையொட்டி அயோத்தி நகரில் துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. கோவில்கள், மசூதிகள் போன்ற வழிபாட்டுத் தலங்களுககு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...