திருமலையில் பக்தர்கள் ஓய்வறை பெற 6 இடங்களில் சிறப்பு கவுண்ட்டர்கள்.!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தா்கள் ஓய்வறைகள் பெறுவதற்காக கவுண்ட்டர்கள் இன்று (சனிக்கிழமை) காலை 8 மணியில் இருந்து செயல்பாட்டுக்கு வருகின்றன.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தா்கள் ஓய்வறைகள் பெறுவதற்காக திருமலையில் 6 இடங்களில் புதிதாக சிறப்பு கவுண்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்தக் கவுண்ட்டர்கள் இன்று (சனிக்கிழமை) காலை 8 மணியில் இருந்து செயல்பாட்டுக்கு வருகின்றன.
திருமலையில் ஜி.என்.சி டோல்கேட்டில் உள்ள பொருட்கள் வைப்பறையில் 2 கவுண்ட்டர்கள், பாலாஜி பஸ் நிலையத்தில் 2 கவுண்ட்டர்கள், ராம் பாகீதா பஸ் நிலையத்தில் 2 கவுண்ட்டர்கள், கவுஸ்தபம் விடுதியில் 2 கவுண்ட்டர்கள், எம்.பி.சி. விடுதியில் 2 கவுண்ட்டர்கள், மத்திய வரவேற்பு மையத்தில் (சி.ஆர்.ஓ) 2 கவுண்ட்டர்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் பக்தர்கள் தங்களின் பெயரை முன்பதிவு செய்து ஓய்வறைகளை பெற்றுக் கொள்ளலாம்.
பெயர் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு அவர்களின் செல்போனில் குறுஞ்செய்தி மூலம் ஒதுக்கப்பட்ட அறைகள் விவரம் குறித்து தெரிவிக்கப்படும். அதில் ஒதுக்கப்பட்ட அறைகள் உள்ள பகுதியில் துணை விசாரணை அலுவலகங்களுக்கு சென்று கட்டணம் செலுத்தி பக்தர்கள் அறைகளை பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Leave your comments here...