இந்தியா
ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க சீரம் நிறுவனத்துக்கு அனுமதி.!
இந்தியாவில், ‘ஸ்புட்னிக் – வி’ தடுப்பூசிகளை தயாரிப்பதற்காக, ‘சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா’ நிறுவனத்திற்கு, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு நேற்று ஒப்புதல் அளித்தது.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் – வி தடுப்பூசியை, இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு உபயோகிக்க, மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்த தடுப்பூசிகளை இறக்குமதி செய்யும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
இந்தியாவில், இந்த ஸ்புட்னிக் – வி தடுப்பூசிகளை பரிசோதனை செய்து தயாரிப்பதற்காக, சீரம் நிறுவனம் சமீபத்தில் அனுமதி கோரி இருந்தது.இந்நிலையில், சீரம் நிறுவனத்திற்கு, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்தது. மஹாராஷ்டிராவின் புனேவில் உள்ள ஹதப்சார் மையத்தில், இந்த ஸ்புட்னிக் – வி தடுப்பூசிகள் தயாரிக்கப்பட உள்ளன.
Leave your comments here...