கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி பல்வேறுதிட்டங்களை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க .ஸ்டாலின்
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 97-வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
கொரோனா தொற்று காரணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளில் பெரிய அளவில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொண்டார். மேலும் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு பல மக்கள் நலத் திட்டங்களை முதல்-அமைச்சர் இன்று துவக்கி வைக்க உள்ளார்.
இந்நிலையில், கருணாநிதி நினைவிடத்தில் ‘போராளியின் வழியில் தொடரும் வெற்றி பயணம்’ என அலங்கரிக்கப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.உடன் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, கனிமொழி, சேகர் பாபு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை மரியாதை செலுத்தினர்.
இந்த நாளில் மக்கள் நல்வாழ்விற்கு கொரோனா பாதிப்பு நிவாரண நிதி உதவி இரண்டாவது தவணை ரூபாய் 2000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஐந்து திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அதில் கொரோனா பாதிப்பு நிவாரண உதவியாக 14 மளிகை பொருட்கள் அடங்கிய பைகள் வழங்குதல், கொரோனா நோய்க்கு நிவாரணமாக அறிவிக்கப்பட்ட இரண்டாவது தவணை ரூபாய் 2000 வழங்குதல், தமிழ்நாடு அரசு அறநிலையத்துறையின் கீழ் ஒரு கால பூஜையுடன் இயங்கும் 12 ஆயிரத்து 959 கோயில்களில் மாத சம்பளம் இன்றி பணிபுரியும் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவியாக ரூபாய் 4 ஆயிரம், 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகை பொருட்கள் வழங்குதல் , நோய் தொற்றால் இறந்த பத்திரிக்கையாளர் குடும்பத்தினருக்கு ரூபாய் 10 லட்சம், மருத்துவர், மருத்துவ பணியாளர் காவலர் மற்றும் நீதிபதிகள் ஆகியோரின் குடும்பத்தினருக்கு ரூபாய் 25 லட்சம் வழங்குதல் ஆகிய உதவி திட்டங்களை வழங்கி நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். அத்துடன் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்ட பயனாளிகள் 10 நபர்களுக்கு அரசு பயன்களையும் வழங்கவுள்ளார்.
Leave your comments here...