திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப சுவாமி திருக்கோவிலுக்கு நிலுவை தொகை வழங்கினார் – முதலமைச்சர் பழனிசாமி
1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு தாலுகாக்கள் கேரளாவில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் என்ற பெயரில் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டன. தமிழகத்துடன் இணைக்கப்பட்டபோது, திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் திருவட்டார் பகுதிகளில் இணைந்தன. இந்த நிலங்களை கையகப்படுத்திய தமிழக அரசு, ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தொகையை பத்மநாப சுவாமி கோயிலுக்கு கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.
பின்னர் தஸ்திக் எனக் குறிப்பிடப்படும் இந்த தொகை, 2001ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்தது. இதனை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று, வருவாய்த்துறை சார்பில் திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப சுவாமி திருக்கோவிலுக்கு 2001 முதல் 2019 வரை நிலுவையாக உள்ள தஸ்திக் தொகையான ரூ.1.67 கோடிக்கான காசோலைகளை பத்மநாத சுவாமி திருக்கோவில் செயல் அலுவலர் அவர்களிடம் வழங்கினார். அருகில் வருவாய் துறை அமைச்சர் ஆர்பி.உதயகுமார் தலைமை செயலாளர் ஆகியோர் உடன் இருந்தனர்
Leave your comments here...