ஆட்சிக்கலைப்பு : பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில் நியாயமான விசாரணை இல்லை – சுப்ரமணியசுவாமி எச்சரிக்கை
பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில், நியாயமான விசாரணையை மேற்கொள்ள எந்தத் தடையும் இல்லை. ஆனால், உள்நோக்கத்தோடு அரசு தரப்பில் செயல்படுவதாகத் தெரிய வந்தால், தமிழக அரசை கலைப்பதை தவிர வேறு வழியில்லை,” என, பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசுவாமி கூறினார்.
சென்னை கேகே நகர் பகுதியில் இயங்கி வரும் பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தும் போது பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, பள்ளியில் நடந்ததாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டு குறித்து, தீவிர விசாரணை நடப்பது வரை எதுவும் தவறில்லை. தி.மு.க.,வுக்கு பின்புலமாக இந்த விஷயத்தில், தி.க., தான் செயல்படுகிறது. தி.மு.க., ஆட்சி மிக சுலபமாக ஏற்பட்டு விடவில்லை. ஸ்டாலினின் மனைவி துர்காவின் கடவுள் சிந்தனை, வழிபாடு இவைகளின் பலனாகத் தான், ஸ்டாலினுக்கு முதல்வர் ஆகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை, அவர் நல்ல வழியில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கல்வியில் சிறந்ததாகச் சொல்லப்படும் பள்ளி என்றால், அதில் எப்படியாவது தம் பிள்ளைகளுக்கு ‘சீட்’ வாங்கி விட வேண்டும் என்று தான் எல்லா பெற்றோரும் நினைப்பர். அதற்காக, பல்வேறு வகையில் சிபாரிசுகளையும் செய்வர். அப்படி, இந்தப் பள்ளியில் சீட் கேட்டு சிபாரிசு செய்தவர்கள் பலரையும், நிர்வாகத்தினர் ஆணவத்தோடு அவமரியாதை செய்திருக்கின்றனர். அதெல்லாம் கூட, இந்தப் பிரச்னை பூதாகரமாக்கப்படுவதன் பின்னணியாக இருக்கின்றன.
மேலும் தமிழகத்தில் நீண்ட காலத்திற்கு பிறகு ஆட்சிக்கு வந்துள்ளதிமுக எல்லா விஷயங்களிலும் தெளிவாக முடிவெடுக்க வேண்டும் இல்லையென்றால் ஆட்சியை கலைக்கும் சூழல் உருவாகும் என்றும் எச்சரித்துள்ளார்.ஒருவேளை உள்நோக்கம் கொண்டு செயல்பட்டால் நானே ஆட்சியை கலைப்பேன் கட்டாயம் அதை செய்து காட்வேன். என்னைப் பொறுத்தவரை விசாரணை ஒரு தலைபட்சமில்லாமல் நேர்மையாக நடக்க வேண்டும். அதில் துளி அளவு சந்தேகம் ஏற்பட்டாலும், தமிழகத்தில் விசாரணை நடக்கவிடாமல் செய்து விடுவேன் என்றும் கூறியுள்ளார்.
Leave your comments here...