தொடர் மழையால் குமரியில் குளங்கள் உடைப்பு : குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும் – பாஜக எம்.எல்.ஏ எம்.ஆர். காந்தி கோரிக்கை

தமிழகம்

தொடர் மழையால் குமரியில் குளங்கள் உடைப்பு : குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும் – பாஜக எம்.எல்.ஏ எம்.ஆர். காந்தி கோரிக்கை

தொடர் மழையால் குமரியில் குளங்கள் உடைப்பு : குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும் – பாஜக எம்.எல்.ஏ எம்.ஆர். காந்தி கோரிக்கை

குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் குளங்கள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. பெரும்பாலான குளங்கள் நிரம்பி மறுகால் பாய்கிறது.

மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பின் கீழ் மொத்தம் 2,040 குளங்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால் 1850 குளங்கள் நிரம்பியுள்ளன. 30-க்கும் மேற்பட்ட குளங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.இது ஒருபுறமிருக்க குமரி மாவட்டத்தில் தாழ்வான பகுதிகள் அனைத்திலும் மழை வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது. சில பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள், மழை வெள்ளம் காட்டாற்று வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் மீன்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.


இதேபோல் மாவட்டம் முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள தென்னந்தோப்புகள், வாழை தோட்டங்கள், ரப்பர் தோட்டங்கள் போன்றவற்றில் மழை வெள்ளம் தேங்கி நிற்கிறது. கன்னிப்பூ நெல் சாகுபடிக்காக விவசாயிகள் நெல் வயல்களில் ஏர் உழுது சமன்படுத்திய வயல்களில் எல்லாம் மழை வெள்ளம் தேங்கி நிற்கிறது. நடவுக்காக தயார் செய்யப்பட்டிருந்த நெல் நாற்றுகளையும் மழை வெள்ளம் மூழ்கியபடி நிற்கிறது. இதனால் மாவட்டம் முழுவதும் அனைத்து பயிர் சாகுபடி விவசாயிகளும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.


இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட புத்தேரி பகுதியில் உள்ள குளம் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. வெள்ளம் புகுந்த இடத்திற்கு நாகர்கோயில் தொகுதி எம்எல்ஏ- எம்.ஆர். காந்தி நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். குளம் உடைப்பு பகுதிகளை ஆய்வு செய்தார்.நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி இராஜாக்கமங்கலம் ஒன்றியம் சுண்டபற்றிவிளை பகுதியில் மழையினால் ஏற்பட்ட சேதாரங்களை குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர் குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் விவசாயிகளுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரசு இதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அதேபோல் குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave your comments here...