கனமழை காரணமாக நாகர்கோவில் புத்தேரி குளம் உடைப்பு – நேரில் பார்வையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க பாஜக எம்எல்ஏ காந்தி உத்தரவு..!
குமரி மாவட்டத்தில் நேற்று மதியம் 12 மணி முதல் சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. மதியம் தொடங்கிய மழை இரவு வரை கனமழையாக விட்டு விட்டு நீடித்தது. இதனால் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.
நாகர்கோவில் நகரில் பெய்த கன மழையால் புத்தேரி குளம் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் வீடுகளில் புகுந்தது. ஏராளமான வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் தூங்க முடியாமல் விடிய, விடிய தவித்தனர்.
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புத்தேரி பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் புத்தேரி குளம் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.அந்தப் பகுதிகளை இன்று காலை பார்வையிட்டு தக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தினேன் pic.twitter.com/k87klLXDgI
— M R Gandhi (@MRGandhiNGL) May 26, 2021
இந்நிலையில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர் காந்தி. அவர்கள் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிகு புத்தேரி பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் புத்தேரி குளம் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்த பகுதிகளை இன்று காலை பார்வையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
Leave your comments here...