தலைமறைவாக இருந்த வங்கி கொள்ளையன் மெஹூல் சோக்சி காணவில்லை – போலீஸார் விசாரணை
பஞ்சாப் நேஷனல் வங்கியில்(பிஎன்பி) ரூ.13,500 கோடி கடன் பெற்று மோசடி செய்து கரீபியன் தீவுகளில் ஒன்றான ஆன்டிகுவாவில் வாழ்ந்துவரும் வைர வியாபாரி மெகுல் சோக்ஸி திடீரென காணவில்லை என்று ஆன்டிகுவா போலீஸார் தெரிவிக்கின்றனர்.
மும்பையை தலைமையிடமாக வைத்து, ‘கீதாஞ்சலி’ என்ற வைர விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வந்த மெஹுல் சோக்சி, பஞ்சாப் நேஷனல் வஙங்கியில் ரூ. 12 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டார்.
இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டதால், மேற்கிந்திய தீவான, ஆன்டிகுவாவுக்கு, சோக்சி தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டது. அவரை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க தேவையான ஒத்துழைப்பை அளிப்பதாக ஆன்டிகுவாவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மெஹூல் சோக்சி, ஆன்டிகுவாவில் இருந்து மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரை நாடு கடத்துவது தொடர்பான நடவடிக்கைகளை ஆன்டிகுவா அரசு எடுத்து வந்தது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த ஞாயிறு அன்று, உணவகத்திற்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. அங்கு, வெறும் கார் மட்டும் காணப்பட்டது.
அவர் மாயமானதாக கூறப்படும் தகவலை தொடர்ந்து, இது குறித்து ஆன்டிகுவா போலீஸார் வெளியிட்ட அறிவிப்பில், “ கடந்த 23ம் தேதி மெகுல் சோக்ஸி காரில் செல்வதைக் கண்டோம். அதன்பின் ஜாலி ஹார்பருக்கு சோக்ஸி சென்றுள்ளார். அங்கு சென்றவர் அதன்பின் காணவில்லை. இந்திய தொழிலதிபர் மெகுல் சோக்ஸியின் புகைப்படத்தை தீவின் பல்வேறு நகரங்களுக்கும் அனுப்பி தேடுதலை தீவிரப்படுத்தியுள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மெஹூல் சோக்சி கியூபாவிற்கு தப்பி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குற்றவாளிகளை நாடு கடத்துவது தொடர்பாக, கியூபாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒப்பந்தம் ஏதும் இல்லை.
Leave your comments here...