திருவள்ளுவர் ஒன்றும் திமுக தலைவரல்ல : ஸ்டாலினுக்கு பாஜக தேசியப்பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் பதிலடி.!
தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தின் எதிரே அமைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலையின் மீது விஷமிகள் சிலர் சாணத்தை வீசியும், கறுப்பு காகிதத்தால் கண்களை மறைத்தும் அவமதிப்பு செய்துள்ளனர் தகவலறிந்த வல்லம் போலீசார் விரைந்து வந்து திருவள்ளூர் சிலையை கழுவி சுத்தம் செய்து மாலை அணிவித்தனர்.
பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது, திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசுவது – தஞ்சை, பிள்ளையார்பட்டியில் அவரது சிலையை அவமானப்படுத்துவது என, தமிழுக்காகப் பாடுபட்டவர்களை அவமதிப்பது தொடர்கதையாகிவிட்டது.
இதற்காக, காவல்துறையை கையில் வைத்திருக்கும் அதிமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்! pic.twitter.com/J2HjJOrkiv
— M.K.Stalin (@mkstalin) November 4, 2019
இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் திருவள்ளுவர் சிலை அவமதிப்பு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழுக்காக பாடுபட்டவர்களை அவமதிப்பது தொடர் கதையாகிவிட்டது எனவும், இதற்கு காவல்துறையை கையில் வைத்திருக்கும் அதிமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டும் எனவும் பதிவிட்டிருந்தார்.
DMK leaders rant on BJP is infact against Tamil and Tamil culture. I challenge Mr @mkstalin to say vibhuti on forehead is anti-Tamil. If he has guts to say that putting vibhuti on forehead is anti-Tamil then Tamilinas will definitely send him off. pic.twitter.com/scNdpzkgL1
— P Muralidhar Rao (@PMuralidharRao) November 4, 2019
Thiruvalluvar was Saint not a DMK leader. He lived for universal values which are applicable for entire humanity & never favoured sectarian values. @mkstalin must desist from narrow interpretation of Saint Thiruvalluvar. DMK always betrayed Tamilians in last few decades for power pic.twitter.com/1MwV9NkVoA
— P Muralidhar Rao (@PMuralidharRao) November 4, 2019
இதற்கு பதிலடி தரும் விதமாக பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: உலகளாவிய மனித குலத்திற்கான மதிப்பீடுகளுடன் வாழ்ந்தவர் திருவள்ளுவர். அவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைக்க நினைப்பதை, ஸ்டாலின் கைவிட வேண்டும். திருவள்ளுவர் ஒரு துறவி; அவர் ஒன்றும் திமுக தலைவர் அல்ல. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Leave your comments here...