கூடுதலாக 20 கோடி தடுப்பூசி உற்பத்தி.. பாரத் பயோடெக் அறிவிப்பு

இந்தியா

கூடுதலாக 20 கோடி தடுப்பூசி உற்பத்தி.. பாரத் பயோடெக் அறிவிப்பு

கூடுதலாக 20 கோடி தடுப்பூசி உற்பத்தி.. பாரத் பயோடெக் அறிவிப்பு

நாட்டில் தடுப்பூசிக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், குஜராத் மாநிலத்தில் கூடுதலாக 20 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் தற்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் போடப்படுகின்றன. விரைவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி கிடைக்க உள்ளது. இதில் உள்நாட்டு தயாரிப்பான கோவாக்சின் பக்க விளைவுகள் மிகவும் குறைந்த ஒன்றாக உள்ளது.

கோவிஷீல்டை போன்றே உருமாறிய கொரோனா வைரஸ்களையும் எதிர்கொள்ளும் திறன் பெற்றிருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன. இந்நிலையில் கோவாக்சினை உற்பத்தி செய்வதற்கான வளங்களை அதிகரித்துள்ளதாக பாரத் பயோடெக் நேற்று (மே 20) அறிக்கை வெளியிட்டது.

குஜராத்தின் அங்கலேஷ்வரில் அமைந்துள்ள அதன் துணை நிறுவனத்தில் நான்காம் காலாண்டு முதல் உற்பத்தியை தொடங்க உள்ளது. ஆண்டுக்கு 20 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த ஆலை மட்டுமின்றி பெங்களூரு, ஐதராபாத்திலும் கோவாக்சின் உற்பத்தி செய்யப்படுகிறது. நிதி ஆயோக் உறுப்பினரான வி.கே.பால் கடந்த வாரம் அளித்த பேட்டியில், இந்தியாவில் இந்தாண்டு இறுதியில் 200 கோடி தடுப்பூசிகள் தயாராக இருக்கும் என தெரிவித்திருந்தார். தற்போது 20 கூடுதல் கோவாக்சின்கள் மூலம் அந்த இலக்கை எட்டுவது எளிதாகும்.

Leave your comments here...