கொரோனா பரவல் : எரிவாயு சிலிண்டர்கள் வீட்டிலயே விநியோகம் செய்யும் பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
- May 20, 2021
- jananesan
- : 725
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிவேகமாக அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 34,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16,99,225 ஆக அதிகரித்துள்ளது.
இதைத் தடுக்க மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருந்தும் இந்த தொற்று காரணமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கும் விதமாக தடுப்பூசி போடும்பணி நடந்து வருகிறது
மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முன்கள பணியாளர்களின் பங்கு அளப்பரியது. மருத்துவ, சுகாதாரத்துறை பணியாளர்கள் முன்கள பணியாளர்களாக செயல்பட்டு வருகின்றனர். சமீபத்தில் பத்திரிக்கை, ஊடகத்துறையை சார்ந்தவர்கள் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்ட்டனர்.மயானங்களில் பணியாற்றுபவர்களும் முன்கள பணியாளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
மிகவும் இக்கட்டான இந்த சூழ்நிலையில் கூட , சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வீட்டிலயே வந்து விநியோகம் செய்யும் பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்கும் படி தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்!!! @mkstalin @BJP4TamilNadu @Murugan_TNBJP
— Nainar Nagenthiran (@NainarBJP) May 20, 2021
இந்த நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் நயினார் நாகேந்திரன் வெற்றி பெற்றதோடு, பாஜக சட்டமன்றக் குழு தலைவராகவும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று செய்துள்ளார். அதில்:- மிகவும் இக்கட்டான இந்த சூழ்நிலையில் கூட , சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வீட்டிலயே வந்து விநியோகம் செய்யும் பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்கும் படி தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.என கூறியுள்ளார்.
Leave your comments here...