கொரோனா நிவாரணமாக அடுத்த மாதம் முதல் ரேஷனில் பொருட்கள்.!

தமிழகம்

கொரோனா நிவாரணமாக அடுத்த மாதம் முதல் ரேஷனில் பொருட்கள்.!

கொரோனா நிவாரணமாக அடுத்த மாதம் முதல் ரேஷனில் பொருட்கள்.!

கொரோனா முதல் அலையில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்ட போது, பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், ரேஷன் அட்டைகளுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி , கோதுமை, பருப்பு வகைகள் மே மாதம் முதல் ஜூலை வரை இலவசமாக வழங்கப்பட்டன.

தற்போது 2ஆவது அலையிலும் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். எனவே கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ரேஷன் அட்டைகளுக்கு கூடுதலாக உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள் மத்திய தொகுப்பில் இருந்து மாநிலங்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்துக்கு ஒரு மாதத்திற்கு 1.80 லட்சம் டன் அரிசி என்று இரு மாதங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை அந்தியோதயா கார்டுதாரர்கள் மட்டுமல்லாமல் அனைத்து அரிசி கார்டுதாரர்களுக்கும் ஏற்கனவே வழங்கப்பட்டு வருவதுடன், கார்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா 5 கிலோ அரிசி கூடுதலாக வழங்கப்பட உள்ளது.

தற்போது தமிழக ரேஷன் கடைகளில் வழக்கமான அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், கொரோனா நிவாரணத் தொகையில் முதல் தவணையான ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது. எனவே, மத்திய அரசு, தமிழக அரசு அறிவிப்பின்படி, 5 கிலோ கூடுதல் அரிசி ஜூன் மாதம் முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படவுள்ளது.

Leave your comments here...