கன்னியாகுமரி மாவட்டத்தில் ரெம்டெசிவிர் விற்பனை நிலையம் தொடங்க வேண்டும் – முதல்வருக்கு பாஜக எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி வலியுறுத்தல்…!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, ‘ரெம்டெசிவிர்’ மருந்தை டாக்டர்கள் பரிந்துரைத்து வருகின்றனர். கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதால் நோயாளிகளின் உறவினர்கள் மருந்தை தேடி அலைந்தனர்.இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே ரெம்டெசிவிர் மருந்துக்காக மக்கள் அலைமோதும் நிலை உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மையத்தை உடனடியாக தொடங்க வேண்டுமென நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம்ஆர்.காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- கன்னியாகுமரி மாவட்டத்தில் பெருகி வரும் கொரோனா தொற்றால், மக்கள் கடும் அவதிக்கு உட்பட்டுள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்ட மக்களின் சிகிச்சைக்காக தேவைப்படும் ரெமெடிசிவேர் மருந்தின் விற்பனை முகாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் இல்லாத காரணத்தால் மக்கள் அம்மருந்தை பெருவதற்கு திருநெல்வேலி வரை செல்ல வேண்டிய சூழல் நிலவி வருகிறது.
எனவே இப்பிரச்சினையை தீர்க்க வேண்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்க்காக ஒரு தனிப்பட்ட ரெமெடிசிவேர் விற்பனை முகாம் நாகர்கோவிலில் அமைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களையும் சுகாதரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டோர் அரசு மருத்துவமனையிலும் அரசின் கொரோனா பாதுகாப்பு முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சரியான உணவு அளிக்கவும் அவர்கள் தங்கும் இடத்தை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Leave your comments here...