தமிழகத்துக்கு வந்த முதல் ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வருகை.!
தமிழகத்துக்கு வந்த முதல் ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் 80 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை இன்று காலை விநியோகித்தது. இந்திய ரயில்வே இதுவரை, சுமார் 500 டேங்கர்களில் 7900 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜனை நாடு முழுவதும் விநியோகித்துள்ளது.
கடந்த சில நாட்களாக, ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சுமார் 800 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை விநியோகித்துள்ளன.ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கடந்த ஏப்ரல் 24ம் தேதி, மகாராஷ்டிராவில் 126 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனுடன் தனது பணியை தொடங்கின. 20 நாளில் 12 மாநிலங்களுக்கு 7900 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை விநியோகித்து தனது செயல்பாட்டை ரயில்வே அதிகரித்துள்ளது.
நாட்டின் மேற்கு பகுதியில் ஹபா மற்றும் முந்ரா, கிழக்கே ரூர்கேலா, துர்காபூர், டாடாநகர், அங்குல் ஆகிய இடங்களில் இருந்து ஆக்ஸிஜனை பெற்று உத்தரகாண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, ஹரியானா, தெலங்கானா, பஞ்சாப், கேரளா, தில்லி மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு சிக்கலான பாதைகளை கடந்து இந்திய ரயில்வே கொண்டு செல்கிறது.
ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளாவுக்கு முதல் ஆக்ஸிஜன் எக்ஸபிரஸ் ரயில்கள் முறையே 40 மெட்ரிக் டன் மற்றும் 118 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை கொண்டு சென்று கொண்டிருக்கிறது.
The first #OxygenExpress has reached Chennai from Durgapur with medical Oxygen for COVID-19 patients in Tamil Nadu. pic.twitter.com/472Kf6oF4I
— Piyush Goyal (@PiyushGoyal) May 14, 2021
தமிழகத்துக்கு சென்ற முதல் ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் 80 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை இன்று காலை விநியோகித்தது. இரண்டாவது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் தமிழகத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.
இதுவரை 130 ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தங்களது பயணத்தை நிறைவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை மகாராஷ்டிராவுக்கு 462, உத்தரப் பிரதேசத்துக்கு 2210, மத்தியப் பிரதேசத்துக்கு 408, ஹரியானாவுக்கு 1228, தெலங்கானாவுக்கு 308, ராஜஸ்தானுக்கு 72, கர்நாடகாவுக்கு 120, உத்தரகாண்டுக்கு 80, தமிழகத்துக்கு 80, தில்லிக்கு 2934 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன், ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இன்னும் அதிக ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று இரவு புறப்படுகின்றன.
ஆக்சிசன் தட்டுப்பாட்டைப் போக்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஏற்பாட்டில் நேற்று இரவு 2 மணிக்கு 80 மெட்ரிக் டன் ஆக்சிசன் தண்டையார்பேட்டை வந்தடைந்தது. pic.twitter.com/IuRCc1Vv8t
— Subramanian.Ma (@Subramanian_ma) May 14, 2021
மேற்கு வங்க மாநிலம், துர்காபூரில் இருந்து, நேற்று அதிகாலை சென்னை, தண்டையார்பேட்டை, கான்கார்ட் ரயில்வே யார்டிற்கு வந்த, முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயிலை, சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன், செயலர் ராதாகிருஷ்ணன், அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் கைதட்டி வரவேற்றனர்.
Leave your comments here...