தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் – மே 17 ஆம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம்.!
- May 14, 2021
- jananesan
- : 948
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை மாநிலத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது. ஒரு பக்கம் முழு ஊரடங்கு அமல்படுத்தியிருப்பது, மற்றொரு பக்கம் தடுப்பூசி போடும் பணிகளை விரிவுபடுத்துவது என தமிழக அரசு முழுமூச்சாக நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது.
தமிழகத்தில், முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வந்தாலும், நோய்த் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையிலும் தொற்று பரவல் குறைந்தபாடில்லை. தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை என நான்கு மணி நேரம் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே நண்பகல் 12 மணி வரை அத்தியாவசிய கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது நேரம் குறைக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகளை தடை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பூ, பழங்கள், காய்கறிகள் விற்கும் நடைபாதை கடைகளுக்கு அனுமதி இல்லை
மே 17 ஆம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் தேநீர் கடைகள் இயங்க அனுமதி இல்லை
Leave your comments here...