சேவாபாரதி சார்பாக அரசு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் காலிப்ரேஷன் மிஷின்.!
கொரோனா நோயாளிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய, சேவா பாரதி களம் இறங்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2-வது அலை விஸ்வரூபம் எடுத்து ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. இந்த கொரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சிலர் படுக்கை இல்லாமல் அவதி அடைந்து வருகிற சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. ஒரு சில மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவம் தொடந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில் கொரோனா கொரோனா நோயாளிகள், பொதுமக்களுக்கு சேவா பாரதி தனது சேவையை வழங்கி வருகிறது. தினமும் 1000 பேருக்கு உணவு வழங்கப்பட உள்ளது. முதலாவதாக கொரோனா நோய் குறித்த விழிப்புணர்வையும், நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வும் எற்ப்படுத்தி வருகிறது. தடுப்பூசி குறித்த தவறான கருத்தை, மக்களிடம் இருந்து அகற்ற, அது குறித்த விழிப்புணர்வு எற்ப்படுத்தி வருகிறது. கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களை, மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டும், வீட்டில் இருக்கும் முதியவர்களுக்கு, தேவையான மருந்துகள் வாங்கிக் கொடுத்து உதவிகள் செய்து வருகிறது சேவா பாரதி.
#தூத்துக்குடி செய்திகள்#சேவாபாரதி மற்றும் #சோஹோபவுண்டேஷன் சார்பாக ஆக்ஸிஜன் காலிப்ரேஷன் மிஷின் (ஒரு மிஷின் 4.55 இலட்சம் ) அரசு மருத்துவமனைக்கு 2 கருவிகள் இலவசமாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் #RSS கோட்ட தலைவர் சீனிவாசன் கண்ணன், மாவட்ட தலைவர் ராஜேந்திரன் சில பொறுப்பாளர்கள் இருந்தனர் pic.twitter.com/M1MtJKu31D
— VSKDTN – Vishwa Samvad Kendra Dakshin Tamilnadu (@VskdtnNews) May 11, 2021
தூத்துக்குடி மாவட்டத்தில் சேவாபாரதி மற்றும் சோஹோபவுண்டேஷன் சார்பாக ஆக்ஸிஜன் காலிப்ரேஷன் மிஷின் (ஒரு மிஷின் 4.55 இலட்சம் ) அரசு மருத்துவமனைக்கு 2 கருவிகள் இலவசமாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் RSS கோட்ட தலைவர் சீனிவாசன் கண்ணன், மாவட்ட தலைவர் ராஜேந்திரன் சில பொறுப்பாளர்கள் இருந்தனர்
#புதுக்கோட்டை செய்திகள்#சேவாபாரதி மற்றும் சோஹோபவுண்டேஷன் சார்பாக ஆக்ஸிஜன் காலிப்ரேஷன் மிஷின் (ஒரு மிஷின் 4.55 இலட்சம் ) புதுக்கோட்டை மருத்துவ கல்லூரிக்கு 2 கருவிகள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சேவாபாரதி பொறுப்பாளர்கள், மருத்துவர்கள் உடன் இருந்தனர். pic.twitter.com/hyugpxYBQN
— VSKDTN – Vishwa Samvad Kendra Dakshin Tamilnadu (@VskdtnNews) May 11, 2021
புதுக்கோட்டை மாவட்டத்தில் சேவாபாரதி மற்றும் சோஹோபவுண்டேஷன் சார்பாக ஆக்ஸிஜன் காலிப்ரேஷன் மிஷின் (ஒரு மிஷின் 4.55 இலட்சம் ) புதுக்கோட்டை மருத்துவ கல்லூரிக்கு 2 கருவிகள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சேவாபாரதி பொறுப்பாளர்கள், மருத்துவர்கள் உடன் இருந்தனர்.
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உணவு வழங்கப்படும். உணவு தேவைப்படுவோர், 63690 21406, மருந்து தேவைப்படுவோர், 84388 88991, மருத்துவ உதவி தேவைப்படுவோர், 63803 73956, ரத்ததானம், பிளாஸ்மா தானம் செய்ய விரும்புவோர், 97902 50550 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Leave your comments here...