இந்தியாவிற்கு ஸ்பெயின் நாட்டில் இருந்து விமானம் மூலமாக மருத்துவ உபகரணங்கள் வருகை..!
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனை சரிசெய்ய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்தும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் சரக்கு விமானங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன.
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி உதவி செய்ய முன்வந்துள்ளன. இதனை சரி செய்ய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் வெளிநாடுகளில் இருந்தும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் சரக்கு விமானங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி உதவி செய்ய முன்வந்துள்ளன.
🇮🇳🇪🇸
Further building on the momentum in our relations. Shipment of 10 oxygen concentrators and 141 ventilators arrives from Spain. Value this support from our EU partner 🇪🇸. pic.twitter.com/GEwuolsnIj— Arindam Bagchi (@MEAIndia) May 10, 2021
அந்த வகையில் ஸ்பெயின் நாட்டில் இருந்து விமானம் மூலமாக 10 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் 141 வெண்டிலேட்டர்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் இருந்து கிடைத்துள்ள நட்பு ரீதியான உதவி மிகவும் மதிப்பு வாய்ந்தது என இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தாம் பக்ஷி தெரிவித்துள்ளார்.
Leave your comments here...