திரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால் பற்றி எரியும் மேற்கு வங்கம்.!

அரசியல்இந்தியா

திரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால் பற்றி எரியும் மேற்கு வங்கம்.!

திரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால் பற்றி எரியும் மேற்கு வங்கம்.!

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலின்போது ஒருசில இடங்களில் பாஜக- திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது.4ம் கட்ட தேர்தலின்போது, கூச்பெஹாரில் உள்ள சிட்லக்குச்சி தொகுதிக்கு உட்பட்ட 126-வது வாக்குச்சாவடியில் மிகப்பெரிய அளவில் வன்முறை ஏற்பட்டது.

இதை தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகி ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், ஒருசில இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. புர்பா பர்தமான் மாவட்டத்தில் பாஜக- திரிணாமூல காங்கிரஸ் தொண்டர்கள் இடையே நேற்று நடைபெற்ற மோதலில் பாஜகவினர் 4 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல், இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த தங்கள் கட்சி தொண்டர்களை பாஜகவினர் தாக்கியதாகவும் இதில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் திரிணாமூல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.பல்வேறு இடங்களில் வீடுகள் அடித்து நெறுக்கப்பட்டுள்ளன. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய படைகள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் தொண்டர்கள் குறி வைத்து தாக்கப்படுவதாகவும் மாநில காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாஜக மாநில தலைவர் திலிப் கோஷ் தெரிவித்துள்ளார்.


இது குறித்து பர்வேஷ் சாஹிப் சிங் கூறியதாவது: மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின் திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்களால் வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகின்றன. ஓட்டு எண்ணிக்கை நாளன்று அசன்சோலில் உள்ள பா.ஜ.க அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது. தொண்டர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபடுவதை கட்டுப்படுத்தாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும்.திரிணமுல் தலைவர்கள் உ.பி., அல்லது பீகார் செல்லும் போது மேற்குவங்கத்தை போல தாக்கப்பட்டால் அவர்கள் எப்படி உணர்வார்கள்.


ஆகவே கட்சி தொண்டர்கள், எம்.எல்.ஏ.,க்கள் எம்.பி.,க்கள் தங்களின் வரம்பில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். வெற்றியும் தோல்வியும் தேர்தலின் ஒரு பகுதியாகும். இந்நிலையில் திரிணமுல் கட்சி தொண்டர்கள், பாஜக தொண்டர்களை கொலைவெறி தாக்குதலும், வாகனங்களை உடைப்பதும், வீடுகளுக்கு தீ வைப்பதையும் நிறுத்த வேண்டும். அவர்களை கட்சி தலைவராகிய நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். முதல்வராகிய நீங்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் எல்லாம் டில்லி வந்து செல்ல வேண்டும் என்று நினைவில் கொள்ளுங்கள். இதை ஒரு எச்சரிக்கையாக கருதுங்கள் என்றார்.

Leave your comments here...