சென்னை விமான நிலையத்தில் ரூ 27.46 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்.!
சென்னை விமான நிலையத்தில் ரூ 27.46 லட்சம் மதிப்பிலான 570 கிராம் தங்கம் சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது.
விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில், ஏர் அரேபியா விமானம் ஜி9-471 மூலம் சார்ஜாவில் இருந்து சென்னை வந்திறங்கிய, பெரம்பலூரை சேர்ந்த அஜித்குமார் பூமாலை, 22, என்பவரை விமான நிலையத்தை விட்டு வெளியே செல்லும் வழியில் சுங்க அதிகாரிகள் இடைமறித்து விசாரித்தனர்.
அவரை சோதனையிட்ட போது, அவரது உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 385 கிராம் தங்கம் கண்டறியப்பட்டு சுங்க சட்டத்தின் கீழ் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு ரூ 18.55 லட்சம் ஆகும்.
Chennai Air Customs:570 gms gold worth Rs. 27.46 lakhs seized frm two pax who arrvd frm Sharjah& Dubai. 3 gold paste bundles concealed in rectum were recovered. pic.twitter.com/hCH3ZRmlvt
— Chennai Customs (@ChennaiCustoms) May 3, 2021
இதே போன்ற மற்றொரு சம்பவத்தில், எமிரேட்ஸ் விமானம் ஈகே-542 மூலம் துபாயில் இருந்து சென்னை வந்திறங்கிய சென்னையை சேர்ந்த நூர்முகமது உஸ்மான், 21, என்பவரை சுங்க அதிகாரிகள் இடைமறித்து விசாரித்தனர்.
அவரை சோதனையிட்ட போது, அவரது உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 185 கிராம் தங்கம் கண்டறியப்பட்டு சுங்க சட்டத்தின் கீழ் கைப்பற்றது. இதன் மதிப்பு ரூ 8.91 லட்சம் ஆகும்.மொத்தம் ரூ 27.46 லட்சம் மதிப்பிலான 570 கிராம் தங்கம் சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.
Leave your comments here...