கேரள ஆயுர்வேதிக் மையத்தில் இலவச ஆயுஷ்க்வாத் குடிநீர் வழங்கும் முகாம்.!
மதுரை கே.கே.நகர் ஆர்ச் அருகில் உள்ள கேரள ஆயுர்வேதிக் கிளினிக்கில் இலவச ஆயுஷ்க்வாத் மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் விழா நடந்தது.
கேரள ஆயுர்வேத கிளினிக் சிறப்பு மருத்துவர் டாக்டர் எஸ்.கே.பிரமோத் துவக்கி வைத்து கூறியதாவது:- தற்போது கரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் பலர் நுரையீரல் பாதிப்பில் சிக்கியுள்ளனர். இதனை தவிர்க்க மத்திய ஆயுஷ் அமைச்சகம் எங்களின் மூலிகை மருந்தான ‘ஆயுஸ்க்வாத்”தை பரிந்துரை செய்துள்ளது.
சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் ஆயுஸ்க்வாத் பவுடரை நன்கு காய்ச்சி கசாயமாக காலையில் சாப்பிட்ட பின் ஒரு வேளை அருந்தினால் போதும். காய்ச்சல் மற்றும் செரிமான கோளாறு உள்ளவர்கள் மட்டும் சாப்பிடும் முன் அருந்த வேண்டும். 100 கிராம் மூலிகை பவுடர் ரூ.150க்கு கே.கே. நகர் ஆர்ச் அருகில் உளள கேரள ஆயுர்வேத கிளினிக்கில் கிடைக்கிறது. மேலும் இச்சிகிச்சை மையத்தில் மூட்டு, இடுப்பு வலி உட்பட அனைத்து நோய்களுக்கும் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார். நிர்வாக இயக்குனர் மாரீஸ்வரி, நிறுவன மேலாளார் சுப்பிரமணி ஆகியோர் உடனிருந்தனர்.
Leave your comments here...