இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்னும் நம்பிக்கையில் வைகையாற்றில் நேத்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.!
- April 27, 2021
- jananesan
- : 1019
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய திருவிழாவானது வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி யாகும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரொண வைரஸ் தொற்று காரணமாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆனது அழகர் கோவில் வளாகத்திலேயே பக்தர்கள் இன்று நடைபெற்றது.
எனினும் பக்தர்கள் வைகை ஆற்றில் மதுரை சிம்மக்கல் வைகை ஆற்று பாலம் பகுதியில் கள்ளழகர் இறங்கிய எண்ணி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள் மொட்டை அடித்தும் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி மற்றும் கள்ளழகர் வேடமிட்டு வலம் வந்தனர்.
இதேபோன்று மதுரை மாவட்டம் தேனூர் கிராமத்தில் 400 ஆண்டுகள் கடந்த பிறகும்கூட தேனூர்மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் பாரம்பரியத்தை மறக்காமல் கள்ளழகருக்கு தேனூர் வைகை ஆற்றின் கரையில் மூடி காணிக்கை செலுத்தி வழிப்பட்டனர். வைகை ஆற்றிற்க்கு வருகை தந்த அனைவருக்கும் முக கவசம் மற்றும் மருந்து தெளிக்க பட்டது. ஏற்பாடுகளை சுழியம் இளைஞர் நற்பணி மன்றத்தின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
செய்தி : RaviChandraN
Leave your comments here...