மதுரை விமான நிலையத்தில் கொரோனா எதிரொலி காரணமாக பயணிகள் வருகை குறைவால் ரத்தாகும் விமான சேவைகள்..!

தமிழகம்

மதுரை விமான நிலையத்தில் கொரோனா எதிரொலி காரணமாக பயணிகள் வருகை குறைவால் ரத்தாகும் விமான சேவைகள்..!

மதுரை விமான நிலையத்தில் கொரோனா எதிரொலி காரணமாக பயணிகள் வருகை குறைவால் ரத்தாகும் விமான சேவைகள்..!

டெல்லி, ஹைதராபாத் ஊர்களுக்கு முற்றிலுமாகவும்.சென்னைக்கு ஒரு விமான சேவை ரத்து செய்யப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக விமானத்தில் வரும் பயணிகளின் எண்ணிக்கை குறைவானதால் சென்னை, ஹைதராபாத் விமானசேவைகள் வியாழக்கிழமை முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மதுரை விமான நிலையத்தில் இருந்து கடந்த வருடம் ஜீலை மாதத்திற்கு பின் கரோனா பொதுமுடக்கத்திற்கு பின் படிப்படியாக விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து மதுரையிலிருந்து புதுதில்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு தினமும் 20 விமானசேவைகள் இயக்கப்பட்டன.

இந்நிலையில் கொரோனாதொற்று பரவல் இரண்டாம் கட்டமாக அலை வேகமாக பரவி வருவதை யடுத்து விமான நிலையத்தில் பயணிகளின் வருகை வெகுவாக குறைந்து வருகிறது.

இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் மதுரையிலிருந்து புதுதில்லி செல்லும் விமானசேவை ரத்து செய்யப்பட்டது. தற்போது மதுரையிலிருந்து ஹைதராபாத் செல்லும் விமான சேவையும் வியாழக்கிழமை முதல் வருகின்ற மே.1 ஆம் தேதி வரை ரத்து செய்யப் பட்டுள்ளது. இதேபோல மதுரையிலிருந்து தினமும் மாலையில் சென்னைக்கு செல்லும் தனியார் விமானமும் பயணிகள் இல்லாததால் தமது சேவையை ரத்து செய்துள்ளது.

இதேபோல மதுரையிலிருந்து மும்பைக்கு செல்லும் நேரடி விமான சேவை ரத்து செய்யப்பட்டு சென்னை வழியாக செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது மதுரையிலிருந்து சென்னை 10 விமான சேவைகளும்,பெங்களூருக்கு 2 பயணிகள் சேவைகளும், மும்பைக்கு 2 சேவைகளும் என மொத்தம் 14விமான சேவைகள் இயக்கப்படுவதாக விமானநிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave your comments here...