கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்படவில்லை – வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம்
வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்ய, தடை ஏதும் விதிக்கப்பட வில்லை’ என, வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்படவில்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்ச்சி செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:- வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ், இதுவரை, 80 நாடுகளுக்கு, 6.44 கோடி, ‘டோஸ்’ தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளன. இதில், ஒரு கோடி டோசுக்கும் மேலான தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
நம் நாட்டில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளுக்கு வெளிநாடுகளில் தேவை அதிகம் உள்ளன. எனவே, தொடர்ந்து தடுப்பூசிகள் கேட்டு, பல்வேறு நாடுகளிடம் இருந்தும் கோரிக்கை வருகின்றன.உள்நாட்டு தேவையை கருத்தில் வைத்தே, தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன என்பதை மற்ற நாடுகள் புரிந்து கொள்வர்.
எனவே, அது குறித்து மற்ற நாடுகளுக்கு முறையாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி ஏற்றுமதி செய்ய, தடை ஏதும் விதிக்கப்படவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
Leave your comments here...