குமரி மாவட்ட பாஜக சார்பில் முப்பெரும் விழா-பொன்.ராதாகிருஷ்ணன், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பங்கேற்பு..!
மகாத்மா காந்தி 150-ஆவது பிறந்த நாளையொட்டி தமிழக பாஜக சார்பாக தமிழகத்தின் அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி முதல் சமூக விழிப்புணர்வு சங்கல்ப பாதயாத்திரை நடைபெற்று வருகிறது. குமரி மாவட்ட பா.ஜ.க. சார்பில் பாதயாத்திரை சுவாமியார்மடம் சந்திப்பில் இருந்து நேற்று மாலை தொடங்கியது. இந்த பாதயாத்திரையை நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தொடங்கி வைத்தார்.
இந்த பாதயாத்திரை காட்டாத்துறை, கல்லுவிளை, முளகுமூடு, அழகியமண்டபம் வழியாக தக்கலையை சென்றடைந்தது. அதனோடு சேர்ந்து சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த தினமான தேச ஒற்றுமை தின விழாவும், தமிழுக்கும், தமிழகத்துக்கும் தொடர்ந்து பெருமை சேர்த்துவரும் நமது பாரத பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்களை பாராட்டும் விழாவும் என முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.பின்னர் அந்த யாத்திரையின் வெற்றி விழா, நிறைவு விழா இரவு பஸ்நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடந்தது.
Small video clip on #Gandhi150 #GandhiSankalpYatra pic.twitter.com/4RsAJyRsrc
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) October 31, 2019
இதில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில்:-
உலகமெங்கும் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் மகாத்மாகாந்திக்கு மட்டும் தான் சிலை வைக்கப்பட்டுள்ளது. காந்தியின் 150-வது பிறந்தநாளை கொண்டாட காங்கிரசார் முன்வரவில்லை. சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரசை கலைக்க வேண்டும் என்று கூறியதால் அவரது பிறந்தநாளை கொண்டாட காங்கிரசார் மறந்து விட்டார்களோ, என்னவோ. இந்தியாவை ஒருங்கிணைத்தவர், சர்தார் வல்லபாய் படேல். அவர் இல்லாமல் இருந்திருந்தால், இந்தியா பல நாடுகளாக பிரிந்திருக்கும். அவரை போல் பிரதமர் மோடி செயல்படுகிறார் என்று தெரிவித்தார்.
இந்த விழாவில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மாநில துணை தலைவர் எம்.ஆர்.காந்தி, மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர் குமரி ப.ரமேஷ், மாவட்ட பொதுச்செயலாளர் தங்கப்பன், நிர்வாகிகள் உண்ணிகிருஷ்ணன், வேல்பாண்டியன், தர்மராஜ், , சிவபாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Leave your comments here...