நடிகர் ரஜினிகாந்திற்கு ‛தாதா சாகேப் பால்கே’ விருது
திரைப்பட துறையில் சிறந்து விளங்குவோருக்கு 1969ம் ஆண்டு முதல் ‛தாதா சாகேப் பால்கே’ விருது வழங்கப்பட்டு வருகிறது. அமிதாப் பச்சன், சத்யஜித் ரே, ராஜ் கபூர் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன் (1996), கே.பாலச்சந்தர் (2010) ஆகியோர் இந்த விருதினை பெற்றுள்ளனர்.
இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை தந்தற்காக இந்த விருது அளிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இந்திய திரைப்படத் துறையில் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது இதுவாகும். தங்கத் தாமரை பதக்கமும், ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசும் கொண்டது இந்த விருது பெறுபவர்களுக்கு வழங்கப்படும்
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “தமிழக தேர்தலுக்கும் ரஜினிகாந்துக்கு விருது அறிவித்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று அவர் தெரிவித்தார்.
Leave your comments here...