நாங்கள் ஆட்சிக்கு வந்தால், சபரிமலையின் மரபுகளை பாதுகாப்பதற்கான சட்டத்தை கொண்டு வருவோம் – ராஜ்நாத் சிங்
140 தொகுதிகளை கொண்ட கேரள சட்டசபைக்கு, தமிழகத்துடன் சேர்த்து ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ல் தேர்தல் நடக்கிறது. மே 2-ல் முடிவுகள் வெளியாகின்றன.
காங்கிரஸ் இடதுசாரிகள் மற்றும் பாஜக ஆகிய அணிகள் மோதுகின்றன. பாஜகவுக்கு வாக்குகளை சேகரிக்க மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 நாள் பயணமாக கேரளா வந்துள்ளார்.
திருவனந்தபுரம் பிரசார கூட்டத்தில் ராஜ்நாத் பேசியதாவது:- நாங்கள் இங்கு ஆட்சிக்கு வந்தால், சபரிமலையின் மரபுகள், மற்றும் நடைமுறைகளைப் பாதுகாப்பதற்கான சட்டத்தை கொண்டு வருவோம். கேரளாவில் பா.ஜ., ஒரு மாற்று சக்தியாக உருவெடுத்துள்ளது. இந்த தேர்தலில் எங்களின் சீட்டு எண்ணிக்கையும் அதிகரிக்கும். தங்க கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் மத்திய அமைப்புகளுக்கு எதிராக கேரள அமைச்சரவை நீதித்துறை விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. இது அரசியலமைப்பின் கூட்டாட்சி கட்டமைப்பை கேள்விக்குள்ளாக்கும் செயல். என கூறினார்.
கேரள தங்கக் கடத்தல் வழக்கை என்ஐஏ அமலாக்கத்துறை, சுங்கத்துறை ஆகிய அமைப்புகள் விசாரிக்கின்றன. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரான சந்தீப் நாயர் என்பவர், அமலாக்கத் துறை தன்னை பினராயி விஜயனின் பெயரை சொல்லும் படி அழுத்தம் தந்ததாக கூறினார். இது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கூடிய அமைச்சரவை, ஓய்வு நீதிபதி கே.வி.மோகனன் தலைமையில் நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டது
Leave your comments here...