மதுரை வடக்கு தொகுதியில் நெசவாளர், கட்டிட தொழிலாளர்கள் நலன் காக்க பாடுபடுவேன் – பாஜக வேட்பாளர் டாக்டர் சரவணன்

அரசியல்

மதுரை வடக்கு தொகுதியில் நெசவாளர், கட்டிட தொழிலாளர்கள் நலன் காக்க பாடுபடுவேன் – பாஜக வேட்பாளர் டாக்டர் சரவணன்

மதுரை வடக்கு தொகுதியில் நெசவாளர், கட்டிட தொழிலாளர்கள் நலன் காக்க பாடுபடுவேன் – பாஜக வேட்பாளர் டாக்டர் சரவணன்

மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் நெசவாளர்கள் துயர் துடைக்கவும், கட்டிடத் தொழிலாளர்கள் நலனை பேனிக் காக்கவும் தொடர்ந்து பாடுபடுவேன் என, மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் டாக்டர் சரவணன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியது:- திருப்பரங்குன்றம் தொகுதியில் கைத்தறி பூங்கா அமைய பாடுபட்டுள்ளேன். அதேபோல, மதுரை வடக்கு தொகுதியிலும் கைத்தறி பூங்கா அமையவும், கட்டிடத் தொழிலாளர்கள் நலனை காக்கவும் பாடுபடுவேன். மேலும், தொகுதியை பொறுத்த மட்டில் விரிவாக்க பகுதியில் அடிப்படை வசதிகளும், இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெறுகின்ற வகையில் பல இடங்களில் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற ஏதுவாக பயிற்சி மையங்கள் செயல்படுகிறது. சரவணா மல்டி மருத்துவமனை சார்பாகவும், சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலமாக சுமார் 1000-த்துக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால், காது கேளாதோர் கருவி, உபகரணங்கள் மற்றும் பல உதவிகள் செய்து வருகிறேன்.

செல்லூர் கண்மாய் முதல் பந்தல்குடி வரை கிறிதுமால் நதியின் இருபுறம் சுற்றுச் சுவர் கட்டித் தரப்படும். சாலையோர வியாபாரிகளுக்கு மத்திய அரசு திட்டத்தின் படி கடன் உதவி பெற்றுத் தரப்படும். மதுரை முல்லைநகர் பிரச்ணையானது சட்டப்படி நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்படும் என்றார். மதுரை வடக்கு தொகுதியை பொறுத்த மட்டில், திமுக சார்பில் கோ. தளபதியும், பாஜக கூட்டணிக் கட்சியின் சார்பில் டாக்டர் சரவணும், மக்கள் நீதி மையம் சார்பில் அழகரும், அமமூக சார்பில் பேராசிரியர் ஜெயபாலும் போட்டியிடுகின்றனர். களத்தில் வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், பாஜக சார்பில் டாக்டர் சரவணன், வீடு, வீடாகச் சென்று வாக்குகளை சேகரித்து வருகிறார்.

Leave your comments here...